Monday, May 6, 2024

அடிக்கடி தசைப்பிடிப்பு வருதா? இதை சாப்பிடுங்க போதும்

0
இப்பல்லாம் வேலைக்கு போற பெரும்பாலான மக்கள் face பண்ற முக்கிய பிரச்சினை தசைப்பிடிப்பு தான். காரணம், ஓடியாடி வேலை செய்றதை விட computer முன்னாடி உக்காந்து வேலை பாக்குறவங்க தான் அதிகம். ஒரே positionல ரொம்ப நேரம் உக்காந்து இருக்குறது, வேலைப்பளு இப்படி பல காரணங்கள்னால தசைப்பிடிப்பு ஏற்படும். அப்ப வீட்ல வேலை செய்றவங்களுக்கு, அல்லது விளையாட்டு வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படாதுன்னுலாம் அர்த்தம் இல்ல. அதாவது தசைகள் ரொம்ப நேரம் செயல்படல அப்படின்னாலும் பாதிக்கப்படும், அதிகமா செயல்பட்டுட்டே இருந்தாலும் பாதிக்கப்படும். உடற்பயிற்சி, சரியான வழிமுறைகளை பின்பற்றுவது, இதையெல்லாம் தாண்டி சில உணவுப் பழக்க வழக்கங்களை மாத்துனாலே சிறந்த பலன்கள் கிடைக்கும் அப்படின்னா நம்ப முடியுதா? தசைப்பிடிப்பு பாதிப்புகளை சரி செய்யும் உணவு பழக்கங்களை பத்தி தான் இந்த செய்தி தொகுப்புல  தெரிஞ்சுக்க போறோம். B Complex vitamin குறைபாடு இருக்கும்போது தசைப்பிடிப்பு அதிகமா ஏற்படும். பால் மற்றும் பால் பொருட்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆகிய உணவு வகைகள்ல B Complex அதிகமா இருக்கும். தசைப்பிடிப்புகளை தவிர்க்க உடலின் நீர்ச்சத்தை பராமரிக்குறது ரொம்பவே முக்கியம். வியர்வை வழியா உடல்ல இருக்க நீர் வெளியேறும்போது உப்பு சத்துக்களும் வெளியேறிடும். வெயில் காலம் நெருங்கி வர சூழல்ல உப்பு சக்கரை சேர்த்த lemon ஜூஸ், இளநீர் எடுத்துக்குறதும் வாழைப்பழம் சாப்பிடுறதும் இந்த பிரச்சினையை சமாளிக்க ரொம்பவே உதவியா அமையும். வாழைப்பழத்துல பொட்டாசியம், மக்னீசியம், Vitamin B6 அதிகம் இருக்குறதால விளையாட்டின் போது ஏற்படுற திடீர் தசைபிடிப்பு சரியாக உதவியா அமையும். அதுனாலயே, தசைப்பிடிப்பு பிரச்சினை இருக்குறவங்க தினசரி ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுறது பழக்கமாக்கிகுறது நல்லது. இன்னுமே நிறைய பேர் கவனிக்காம இருக்க விஷயம் மக்னீசியம் குறைபாடு. இந்த மக்னீசியம் குறைபாட்டினால தசைபிடிப்பு ரொம்பவே எளிதா வரலாம். கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை மாதிரியான சிறுதானியங்கள், பூசணி விதைகள், கொண்டைக்கடலை, பல்வேறு வகையான பருப்பு வகைகள் - இதெல்லாம் அப்பப்ப சாப்பிட்டுட்டு வந்தாலே மக்னீசியம் அளவுகள் சீரா பராமரிக்கப்படும். பச்சை காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, பயறுகள் இடம்பெறுற மாதிரியான சரிவிகித உணவு முறையை follow பண்றதோட, சீரான உடற்பயிற்சி மற்றும் முறையான தூக்கம் ஆகிய விஷயங்கள்ல கவனம் செலுத்துனாலே அடிக்கடி ஏற்படும் தசைபிடிப்பு பாதிப்புகள்ல இருந்து விடுபடலாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையா இருக்கு.

குழந்தைகளை பாதிக்கும் செல்போன் ரேடியேஷன்!அதிர்ச்சி தகவல்…

0
செல்போன் போன்களில் இருந்து வெளியேறும் ELECTRIC MAGNETIC RADIATION என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தானதுதான்.

குளிர் காலத்துல Coffee குடிக்குறதால இவ்ளோ பாதிப்பா?

0
குளிர்காலத்தில், அதிகப்படியான குளிரை சமாளிக்க சூடாக எதையாவது குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயல்பை விட கூடுதலாக காபி, டீ அருந்துவது பலரது வழக்கம்.

இந்த நேரங்களில் தண்ணீர் குடித்தால்.. பல நன்மைகள் உடலில் ஏற்படும்…!

0
ஆனால் சில அன்றாட வாழ்க்கை விஷயங்களை நாம் செய்வதற்கு முன்பு அல்லது பின்பு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஆபத்தாக மாறும் Antacid மருந்துகள்

0
உணவு உட்கொள்ளும் நேரங்களுக்கு இடையே சரியான இடைவெளி இல்லாமல் போகும் பட்சத்தில், உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு நேரக்கூடிய மிகவும் பொதுவான அசௌகரியம், அஜீரண கோளாறு.

தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு குட் நியூஸ்..இந்த மருந்து மட்டும் கிடைச்சா செம!

0
நோய்களை சரி செய்வதற்காகத்தான் மருத்துவமனைக்கு செல்வோம். ஆனால், மருத்துவமனைக்கு செல்வதாலேயே புதிய நோய்கள் வரக்கூடும் என்பதை நம்ப முடிகிறதா? மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்படும் 11% தொற்றுக்கு அசினெட்டோபேக்டர்  பெமானி (Acinetobacter...

வெள்ளரிக்காய் கசப்பா இருக்கா? உடனே சரி செய்ய 5 ஈஸியான டிப்ஸ்…

0
புத்துணர்ச்சி தரும் சுவையை கொண்டிருக்கும் வெள்ளரிக்காய் சில நேரங்களில் கசப்பான சுவையை கொண்டிருப்பதுண்டு.

புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்து விற்கப்படும் பால்

0
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பால் மற்றும் பாலினால் செய்யப்படும் பொருட்களை சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள் . எண்ணற்ற பல நன்மைகளை கொண்டுள்ள பால் குடிப்பதனால் நம் உடலுக்கு அதிக பயன்கள் கிடைப்பதோடு...

இந்த பிரச்சினை இருந்தா பலாப்பழம் பக்கமே போகாதீங்க! அலட்சியம் காட்டினால் ஆபத்து…

0
பலருக்கும் பிடித்த பலாப்பழத்தை சாப்பிட்டால் யாருக்கெல்லாம் பாதிப்பு என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

அரை கிளாஸ் ஜூஸ் போதும் கொழுப்புலாம் கரைஞ்சுரும்!!!

0
அப்படி உடல் நலத்தை பேணி பராமரிக்க நினைப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஜூஸ் ஒன்றை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Recent News