முட்டைகோஸ் சமைப்பவர்களின் கவனத்திற்கு! இந்த விஷயத்தை மறந்துராதீங்க.. வெளியான பகீர் தகவல்..

85
Advertisement

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு முக்கியமான பங்குவகிக்கிறது. ஆனால், நாம் உட்கொள்ளும் உணவே விஷமாக இருந்தால் நம் நிலைமை என்னவாக இருக்கும் யோசித்து பாருங்களேன்.

ஏன் என்றால் நாம் உண்ணும் காய்கறிகளில் பூச்சிக் கொல்லிகள் நிறைந்துள்ளன.

பூச்சிக் கொல்லிகள் செடிகளில் பூச்சிகள் வராமல் இருக்கவும், செடிகள் நன்கு செழித்து வளரவும் அடிக்கப்பட்டாலும், அந்த ரசாயன பூச்சிக் கொல்லிகள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் நிறைந்த காய்கறிகளை எவ்வாறு கண்டறிவது, அதனை சுத்தம் செய்யும் முறை போன்றவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கறிவேப்பிலை, புதினா, கீரை வகைகள், புதினா, கறிவேப்பிலையை சமைக்க பயன்படுத்தும் முன்னர் அதனை வினிகர் நீரில் கலந்து சுத்தப்படுத்தி சமைக்கவேண்டும்.

கோவைக்காய், புடலங்காய் மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றை வினிகர் நீர் அல்லது புளி நீரில், 10 நிமிடம் ஊற வைத்து பின் சமைக்கவேண்டும்.

முட்டைக்கோஸ் முட்டைக்கோஸின் மேல் பகுதியில் இருக்கும் இதழ்களில் 3-4 இதழ்களை நீக்கிவிட்டு, பின் உப்பு நீரில் கழுவிவிட்டு, அடுத்து சுத்தமான நீரில் பலமுறை கழுவி, துணியால் துடைத்து பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால் அவற்றில் உள்ள ரசாயனங்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

இதுமட்டுமல்லாது பூச்சிக்கொல்லிகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நீண்ட நாட்கள் உட்கொண்டு வந்தால் புற்றுநோய்,  நரம்பு மண்டல சிதைவு, இனப்பெருக்க மண்டல பாதிப்பு, பிறப்பு குறைபாடுகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலமே பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, சமைப்பதற்கு முன்பு அனைத்து வகையான காய்கறிகளையும் நன்கு சுத்தப்படுத்தி சமைக்கவேண்டும்.

– ரதி ரவி