எங்களைப் பற்றி

சத்தியம் தொலைக்காட்சி சென்னையில் உள்ள சத்தியம் மீடியா விஷன் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு பகுதியாக உள்ளது. “சமூகத்தின் நான்காவது தூண்” என்ற ஒரு சாத்தியமான சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்டது.

சத்தியம் மீடியா விஷன், தன் பணியாளர்களுக்கு அவர்கள் பொறுப்புகளில் முழு சுதந்திரத்தை அளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் சேகரித்து ஒளிபரப்பும் செய்திகளில் நேர்மையும் வெளிப்படையான தன்மையும் உண்மையும் இருக்க வழிசெய்கிறது.

ஒரு நிறுவனமாக வேலை புரியும் பட்சத்தில் நேர்மையான முறையில் பொறுப்புமிக்க வழியில் செய்திகளையும், தற்போதைய விவகாரங்களையும் கொண்டுசெல்கிறது. அவை தெளிவும், உறுதியான நம்பிக்கை தன்மையும் கொண்டு ஒரு இதழியலின் உண்மையான உணர்வை பிரதிபலிப்பதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை எளிதில் அடைய வழி வகுக்கிறது.

சமூகத்தில் ஒரு தனிமனிதனுடைய தீர்மானத்திற்கும், அவன் அணுகக்கூடிய உண்மை நிறைந்த நடுநிலையான தகவல்களும் சமூகத்தை பாதிக்கும் திறன் உள்ளதாகவும், அதன் மூலம் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டுவர சாத்தியங்கள் உள்ளதெனவும் நாங்கள் பெரிதளவில் நம்புகிறோம்.

சத்தியம் தொலைக்காட்சியில் அனைத்து செய்திகளும் மக்கள் அறிய கூடிய வகையில் முழுமையானதாய், உண்மை நிறைந்ததாய், பொய்யாய் விறுவிறுப்பேற்றும் வகையில் இல்லாதவாறு எந்த விதமான அவதூறும் ஏற்படாத வகையில் ஒளிபரப்படுகிறது.

சத்தியம் தொலைக்காட்சியின் அனைத்து ஒளிபரப்புகளும், பார்வையாளர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவும் அதன்மூலம் தீர்மானங்களை அவர்களே எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு என்ற ஒரு விசேஷமான கவனம் கொண்டவை.

சத்தியம் தொலைக்காட்சியினால்.. ஏற்படுத்தப்படும் இந்த மாற்றம் முறைப்படி வரும்போது நம் தேசத்து மக்களை நிதர்சனத்தின் உண்மைகளை எதிர்கொள்ள தயார்ப்படுத்தும் மற்றும் குடிமக்களை அவர்களின் தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இயங்க ஊக்குவிக்கும்.

கொள்கை
“உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும்” அறிவிப்பதே எங்களின் குறிக்கோள். மனிதனின் மனதில் கடந்த, தற்போதைய, எதிர்கால உண்மை என்ன என்ற தேடல் எப்போதும் உள்ளது.

சத்தியம் தொலைக்காட்சி “முழுமையாய் உண்மையை அளிக்கவேண்டும் . என்றென்றும் உண்மையை மட்டும் அளிக்கவேண்டும், மக்களே தீர்மானங்களை எடுக்க விட்டுவிட வேண்டும்” என்ற கொள்கையைக்கொண்டு தன் ஊடக தரத்தை நிறுவ உள்ளது.

நோக்கம்
“உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினருக்கு உண்மையை நடுநிலையான உண்மைச்செய்திகளை அறிவித்து, அதனால் தீர்மானங்களை எடுக்கும் சக்தியை மக்களுக்கு அளித்து சமூகத்தில், நகரத்தில், மாநிலங்களில், அரசியல் பிரதேசங்களில் மற்றும் நாடுகளில் மாற்றங்களை கொண்டுவர அவர்களுக்கு அதிகாரம் தர வேண்டும்” என்பதே நம் நோக்கம் ஆகும் .

எங்களின் குறிக்கோள்
“சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளை தமிழ் பேசும் சமூகத்திற்கு சர்வ தேச தரத்திற்கு இணையாக ஒளிபரப்ப வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்’ “அண்மை தொழில் நுட்பம் மற்றும் தொழில் சார்ந்தவர்களை வேலையில் அமர்த்தி ஒரு தரம் அமைக்கப்பட்டு சாதிக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும். “நீதி நெறிக்குரிய கொள்கைகளை பயிற்சி செய்து நம் உயர்வை மையில்கல்லாக பதிக்க வேண்டும்”