ஒரே கல்லில் பாஜகவை கதற விட்ட ராகுல்! மோடிக்கு ஆப்பு..ஸ்மிருதி ராணிக்கு செக்! ரேபரேலி ராஜதந்திரம்

236
xr:d:DAFxlOt-Vb8:1478,j:8462682263087382339,t:24021314
Advertisement

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரான ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது முடிவாகியுள்ள நிலையில், அமேதி தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் தான் ராகுல் காந்தி அங்கு போட்டியிடவில்லை என மோடி, அமித் ஷா, ஸ்மிருதி ராணி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடாததே காங்கிரஸின் சிறப்பான ராஜதந்திரம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். என்னை எதிர்த்து ராகுல் காந்தியானாலும் சரி, ராபர்ட் வதேராவானாலும் சரி, போட்டியிட்டு ஜெயித்து காட்டட்டும் என ஸ்மிருதி ராணி ஒரு புறம் சவால் விடுத்து வந்தார். பாரம்பரிய வாக்கு வங்கி உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் கூட வேட்பளர்களை அறிவிக்க காங்கிரஸ் தயங்குவதாக மோடி கிண்டலடித்தார்.

ராகுல் அமேதியிலும், பிரியங்கா ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என பாஜாகவினர் முதற்கொண்டு கணக்கீடு செய்து வைத்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் வியூகத்தை மாற்றி இருக்கிறது காங்கிரஸ். நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான KL ஷர்மா அமேதியில் வேட்பாளராக களம் இறங்குகின்றார்.

உண்மையில் இது காங்கிரஸை விட ஸ்மிருதி ராணிக்கே பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை ராகுல் காந்தி அமேதியில் களம் இறங்கி இருந்தால் போட்டி கடுமையாக இருந்தாலும் கூட விமர்சன பிரச்சாரம் செய்தே ஸ்கோர் செய்வது ஸ்மிருதி ராணிக்கு ஒரு வகையில் சாதகமாக அமைந்திருக்கும்.

ஆனால், நேரு குடும்ப விமர்சனம், வாரிசு அரசியல் போன்ற ஆஸ்தான பிரச்சார pointகள் எதுவும் இல்லாமல், அமேதி தொகுதியில் செயல்படுத்துவதாக சொன்ன வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசி வாக்கு சேகரிக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் ஸ்மிருதி ராணி.

ஏற்கனவே வயநாட்டில் பிரம்மாண்ட வெற்றியை ருசி பார்த்தவர் ராகுல் காந்தி. ஆனால், இதுவரையிலும் வட இந்தியாவை தாண்டி தென்னிந்தியாவில் மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய புள்ளிகள் தேர்தல் களத்தை சோதித்து பார்க்க துணிந்ததில்லை.

தென்னிந்தியாவின் 132 தொகுதிகளில் பாஜக கட்சி வேட்பாளர்களாலேயே 20இல் இருந்து 30 தொகுதிகளில் தான் வெல்ல முடியும் என்ற கணிப்பு இருக்கும் பட்சத்தில் தலைவர்களை களம் இறக்குவது ஒரு விஷப்பரீட்சையாகவே அமையும். அந்த வகையில் மோடியால் செய்ய முடியாததை, இது வரை செய்யாத ஒன்றை ராகுல் காந்தி செய்து வெற்றியும் பெற்று காட்டியுள்ளார்.

பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்கவில்லையே தவிர வடக்கும் தெற்குமாக மாநிலங்களில் சுழன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போதும் அமேதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்வேன் என உறுதியளித்துள்ளார் பிரியங்கா.

வேட்பாளராக இருக்கும் அழுத்தத்துடனயே முக்கிய தலைவர்கள் இல்லாமல் முழு மூச்சுடன் பிரச்சாரம் செய்ய, பிரியங்கா காந்தி நேரடி போட்டியில் இறங்காததும் காங்கிரஸுக்கு சாதகமான வியூகமாகாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், ஒட்டுமொத்தமாக ராகுல், பிரியங்கா என அனைவரும் தேர்தலில் போட்டியிடாதது வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தில் இருந்து சற்றே காங்கிரஸுக்கு விலக்கு வாங்கி கொடுத்துள்ளது.  விமர்சனங்களை தாண்டி காங்கிரஸ் சரியான வியூகங்களையே வகுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.