Tuesday, January 14, 2025

இந்த பிரச்சினை இருந்தா பலாப்பழம் பக்கமே போகாதீங்க! அலட்சியம் காட்டினால் ஆபத்து…

கோடை காலம் தொடங்கி விட்டாலே மாம்பழம், பலாப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற பழங்களுக்கு சீசன் களைகட்டிவிடும்.

பலருக்கும் பிடித்த பலாப்பழத்தை சாப்பிட்டால் யாருக்கெல்லாம் பாதிப்பு என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். ஒரே நேரத்தில் அதிகமான பலாப்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அறுவை சிகிச்சையின் போதும் மற்றும் அதற்கு பின்னும் எடுத்துக் கொள்ளக்கூடிய மாத்திரைகளோடு எதிர்வினை புரிகையில் பலாப்பழம் அதிகமான மயக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

அதிகமான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும். பலாப்பழ ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில், பலாப்பழம் சாப்பிட்ட உடன் அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும், சிறுநீரக மற்றும் இரத்த சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் பலாப்பழத்தை தவிர்க்குமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.

Latest news