மீன் சாப்பிடுபவர்கள் மொதல்ல இந்த “KIT” வாங்குங்க…வெளியான பகிர்

140
Advertisement

உணவு பிரியர்கள் ஒருபக்கம் என்றால், அசைவ உணவு பிரியர்கள் மற்றுமொரு பக்கம். அசைவ பிரியர்கள் உணவை ருசிக்கும் முறையை பார்த்தால் அசைவம் சாப்பிடாதவர்களும் கூட சற்று சாப்பிடத்தான் ஆசைப்படுவார்கள்.

அசைவ பிரியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவதில் மீனும் ஒன்று. அவ்வாறு சாப்பிடப்படும் மீன் ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் மீன்களில் ரசாயனங்கள் கலக்கப்படுகிறதென்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை.

‘வாட் யூ மீன்?’ என்று மீன் பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது, ‘FORMALINE ‘ என்கிற ரசாயனம் மீன்களில் கலக்கப்படும் தகவல்.

பொதுவாகவே மீன்களை வாங்கும்போது, சதைப்பகுதி கெட்டியாக இருக்க வேண்டும்.தொட்டதும் அமுங்க கூடாது.  விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் மீன்களின்மீது,  நிறைய ஈக்கள் இருந்தாலே அது நல்ல மீன்கள் என்று எடுத்து கொள்ளலாம்.

ஏன் என்றால் மீன்கள் மீது மருந்துகள் தெளிக்கப்பட்டிருந்தால் அந்த மீனின் மீது ஈக்கள் இருக்காது. சில இடங்களில், மீன்களின் மீது ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசி விற்பார்கள்.

இதனால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை, வாந்தி, தலைச்சுற்றல், சரும நோய்கள் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஃபார்மலின் பூசப்பட்டது மட்டுமல்லாமல், பல நாட்கள், ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனையாகும் மீன்களை சமைத்து சாப்பிட்டாலும், தீங்கு விளைவிக்கும். மேலும், ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை உண்டுவந்தால் புற்றுநோய் வருவதற்கான அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“வெறும் கண்களால் ஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டுப்பிடிக்கவே முடியாது. ‘ஃபார்மலின் ரீ ஏஜெண்ட் டெஸ்ட் கிட்’ மூலமே கண்டுப்பிடிக்க முடியும். இதனை, ஆய்வகங்களில்தான் செய்யவேண்டும் என்றில்லை. பொதுமக்களே சோதனை செய்துகொள்ள அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மீனை வாங்கிக்கொண்டுச் செல்லும் மக்களுக்கு சந்தேகம் வந்தால் வீட்டிலேயேகூட சோதனை செய்யலாம். ‘ஃபார்மலின் ரீ ஏஜெண்ட் டெஸ்ட் கிட்’ கெமிக்கல் கடைகளிலேயே கிடைக்கிறது. இதனை மீன் மீது ஒரேயொரு சொட்டு ஊற்றினால் கலப்படம் இல்லாத மீனாக இருந்தால் நிறம் மாறாது. ஃபார்மலின் கலந்திருந்தால் ரோஸ் கலரில் மாறிவிடும். அதிகப்பட்சம் 2 நிமிடங்களில் கலர் மாறி உறுதியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

-ரதி ரவி