தற்போதைய பெண்கள் அனைவரும் தங்களது சரும அழகை பேணுவதில் பெருத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவ்வாறு சருமத்தை பாதுகாத்துக்கொள்பவர்கள் பெரும்பாலும் செயற்கை முறையை தேர்ந்தெடுக்கிறார்கள் எனவே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி எப்படி இளமையை தக்கவைக்கலாம் என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
இளமையாக தோற்றமளிக்கவும், சருமத்தைப் பராமரிக்கவும் பச்சைப் பாலை முகத்தில் தடவலாம். எனவே, பச்சைப் பாலைக் கொண்டு முகத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை பார்க்கலாம்.
இதற்கு வாழைப்பழம்,தேன்,வைட்டமின் E,பச்சை பால் போன்றவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் தடவ வேண்டும் காய்ந்த உடன் இதை கழுவினால் சிறப்பானதாக இருக்குமென சொல்லப்படுகிறது.
இதில் தேன் நம் முகத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்திருக்குமாம்,அடுத்ததாக இதில் பயன்படுத்தப்படும் பச்சை பால்ப இது உங்கள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. ஏனெனில், இதில் வைட்டமின்-ஏ ஏராளமாக உள்ளது. பச்சை பால் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.
அடுத்ததாக இதிலிருக்கும் வாழைப்பழம் வைட்டமின் சி-யை உள்ளடக்கியுள்ளது மேலும் இது முகத்திலிருக்கும் சுருக்கங்களை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.
எந்த ஒரு செய்முறையை முகத்தில் பயன்படுத்துமுன்னர் பேட்ச் டெஸ்ட் அல்லது நிபுணர்களை அணுகுவது சிறப்பானதாகவே இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.