Sunday, April 21, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

2844 POSTS 0 COMMENTS

உங்க குழந்தைங்க பாப்கார்ன் சாப்பிடுறாங்களா? பெற்றோரே அலர்ட்

0
சோளம் ஆரோக்கியமான உணவு தான். அப்ப அதுல இருந்து தயாரிக்கப்படுற பாப்கார்னும் ஆரோக்கியமானது தானேன்னு ஒரு கேள்வி வருது. ஆனா, குழந்தைங்களுக்கு பாப் கார்ன் அதிகமா தராதீங்க என்பதே உணவியல் நிபுணர்களோட பரவலான அறிவுரையா இருக்கு. பாப் கார்ன் உண்மையில ஆரோக்கியமானதா? குழந்தைகளுக்கு பாப் கார்ன் கொடுக்குறது சரியா?  உண்மையிலேயே ஆரோக்கியமான snacks தான். இது மட்டும் இல்லாம பாப்கார்ன்ல VitaminB, மக்னீசியம், துத்தநாகம் மாதிரியான அத்தியாவசிய சத்துக்களும் கூட பாப்கார்ன்ல இருக்கு. பாப் கார்ன் ஆரோக்கியமா  இருக்குறதும் ஆரோக்கியத்துக்கு கெடுதலா மாறுறதும் அது தயாரிக்கப்படுற முறையில தான் தீர்மானம் ஆகுது. எண்ணெய், வெண்ணெய், உப்பு மற்றும் அதிகப்படியான sesaonings சேர்க்காத வரைக்கும் பாப்கார்னால எந்தக் கெடுதலும் கிடையாது. ஆனா, சாதாரணமா theatreல படம் பாக்க போறவங்கள விட பாப்கார்ன் சாப்பிட போறவங்க தான் அதிகம்னு சொல்லலாம். Theatreல படங்களுக்கு intermission விடும்போது கிட்டத்தட்ட 80% மக்கள் வாங்கிட்டு வர்ற snacks எதுன்னா அது பாப்கார்னா தான் இருக்கும். அதுலயும் குழந்தைங்கலாம் சொல்லவே வேணாம். இதுபோன்ற பாப்கார்னை தான் விரும்பி சாப்பிடுவாங்க. இப்படி theatreல விற்கப்படுற பாப்கார்ன்ல அதிகப்படியான எண்ணெய், வெண்ணெய் மற்றும் வசீகரிக்கும் வாசனை கொண்ட sesaonings சேக்கப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட சில seasoningsல செயற்கை நிறமிகளும் கூட சேர்க்கப்பட்டு இருக்கலாம். இப்படி ஏகப்பட்ட கலோரிகளை ஒரே நேரத்துல சாப்பிடும் போது உடல்ல சக்கரை மற்றும் கொழுப்பு அளவுகள் வெகுவாக உயரக் கூடும். குழந்தைகளுக்கு சின்ன வயசுல புடிச்சு போற சுவைக்கு பிற்காலத்துல அவங்க அந்த வகை உணவையே திரும்ப திரும்ப சாப்பிடத் தூண்டும். இதன் விளைவாக உடல் பருமன் மற்றும் பல இணை நோய்களை ஏற்படக் கூடும். இதனால குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய உணவு விஷயத்துல பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குழந்தைகளை பொறுத்தவரை கொழுப்பு சேக்கபடாத பாப்கார்ன்களை சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம சுகாதாரமான கடைகள்ல வாங்குறது ரொம்பவே முக்கியம். அதுலயும் எந்த வயசுக் குழந்தைக்கு பாப்கார்னை கொடுக்குறாங்க அப்படின்றதையும் கவனத்துல வைக்கணும். காரணம், ரொம்ப சின்ன குழந்தைகளுக்கு பாப்கார்ன் தொண்டையிலயே சிக்கிக் கொள்ளும் அபாயமும் இருக்கு அப்படின்றதால மென்னு விழுங்க தெரிஞ்ச குழந்தைகளுக்கு மட்டும் செயற்கை சுவையூட்டிகள் அதிகம் இல்லாத பாப்கார்ன் மட்டுமே தரலாம். எதையுமே அளவுக்கு மீறி சாப்பிடாம மிதமான அளவுல எடுத்துக்குறதோட, சரிவிகித உணவுல காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேத்துக்குறது ரொம்பவே அவசியம் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தா இருக்கு. -ஷைனி மிராகுலின்

தங்க நகை வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு! வெளியான பகீர் தகவல்..

0
தங்க நகை என்பது அணிகலனாக மட்டுமில்லாமல் ஒரு சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தங்கத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? பெரும்பாலான குடும்பங்கள் தங்கத்தை வாங்கி சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான சட்ட...

மீன் சாப்பிடுபவர்கள் மொதல்ல இந்த “KIT” வாங்குங்க…வெளியான பகிர்

0
உணவு பிரியர்கள் ஒருபக்கம் என்றால், அசைவ உணவு பிரியர்கள் மற்றுமொரு பக்கம். அசைவ பிரியர்கள் உணவை ருசிக்கும் முறையை பார்த்தால் அசைவம் சாப்பிடாதவர்களும் கூட சற்று சாப்பிடத்தான் ஆசைப்படுவார்கள். அசைவ பிரியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவதில்...

முட்டைகோஸ் சமைப்பவர்களின் கவனத்திற்கு! இந்த விஷயத்தை மறந்துராதீங்க.. வெளியான பகீர் தகவல்..

0
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு முக்கியமான பங்குவகிக்கிறது. ஆனால், நாம் உட்கொள்ளும் உணவே விஷமாக இருந்தால் நம் நிலைமை என்னவாக இருக்கும் யோசித்து...

பூஜ்ஜிய கார்பன் இலக்கை எட்ட தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

0
புவிவெப்பமடைதல் பிரச்சனை அதிகரித்து வரும் சூழலில்,இந்தியா பூஜ்ஜிய கார்பன் இலக்கை 2070ல் எட்ட கெடு நிர்ணயித்துள்ளது. தமிழக அரசோ 2050க்குள்பூஜ்ஜிய கார்பன் இலக்கை எட்ட முனைப்பு காட்டுவது நல்ல செய்தி. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற காலநிலை...

1,000 கோடிகளை தாண்டிய திருமணக் கொண்டாட்டம்! அம்பானி மருமகள் யார் தெரியுமா?

0
இந்தியாவில மட்டும் இல்ல, உலகத்துலயே முன்னணி பணக்காரர்கள்ல ஒருத்தரான முகேஷ் அம்பானியோட இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியோட Pre Wedding கொண்டாட்டங்கள் தான் இப்போதைக்கு internetல hot topicஆ போய்ட்டு இருக்கு. ஏறக்குறைய 1,000 கோடிகளை தாண்டி இருக்க இந்த கல்யாண விழாவுக்கு பாலிவுட் நடிகர்கள் தொடங்கி பிரபல பாப் பாடகி ரிஹானா, bill gates, முன்னாள் அமெரிக்க அதிபரோட மகள் இவன்கா ட்ரம்ப், Facebok உரிமையாளர் Mark Zuckerberg மாதிரியான சர்வதேச பிரபலங்கள் வரைக்கும் படையெடுத்து வந்த நிகழ்வுகள் தான் social mediaலயும் செம வைரல். அதெல்லாம் இருக்கட்டும், ஆனந்த் அம்பானி தெரியும், அவரை கல்யாணம் பண்ணிக்க போற ராதிகா merchant யாரு? இதை பத்தி தான் இந்த வீடியோவில தெரிஞ்சுக்க போறோம். முகேஷ் அம்பானியோட மூணு பிள்ளைகள்ல ஆனந்த் அம்பானி தான் இளையவர். அவரை திருமணம் செய்றதுனால, ராதிகா மெர்ச்சண்ட் இந்தியாவோட பணக்கார குடும்பத்தோட மருமகள் அப்படின்ற அந்தஸ்தை அடையுறாங்க. இந்திய மருந்தக நிறுவனமான Encore Healthcare நிறுவனத்தோட தலைமை நிர்வாக அதிகாரியான விரேன் மெர்ச்சண்ட்டோட மகள் தான் ராதிகா மெர்ச்சண்ட். மும்பை கதீட்ரல், ஜான் கோனன், எக்கோலா மாடர்ன் வேர்ல்ட் உள்ளிட்ட பள்ளிகள்ல படிச்ச ராதிகா, நியூயார்க் பல்கலைக்கழகத்துல அரசியல் அறிவியல்ல பட்டம் பெற்று இருக்காங்க. இது போக, இஸ்ப்ரவா நிறுவனத்துல விற்பனை அதிகாரியாகவும் வேலை செஞ்சு இருக்காங்க. இப்போ தன்னோட அப்பாவோட என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தோட இயக்குனர் குழுவுலயும் ஒரு partஆ இருக்காங்க. பரத நாட்டிய கலையிலயும் ரொம்ப ஆண்டுகளாவே பயிற்சி எடுத்துட்டு வர்றாங்க ராதிகா. குறிப்பாக, டிசம்பர் 2022ஆம் ஆண்டு தன்னோட நடன அரங்கேற்றம் அப்ப தான் ஊடகங்கள்லையும் சமூகவலைதளங்கள்லையும் அதிக கவனம் ஈர்க்கத் தொடங்குனாங்க. டிசம்பர் 2022ஆம் ஆண்டுலயே ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம் செஞ்சுக்கிட்டாங்க. ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடக்க போற நிலையில, இப்ப நடந்து இருக்க பிரம்மாண்டமான திருமணத்துக்கு முந்தய கொண்டாட்டங்கள் பேசுபொருளா மாறி இருக்கு. இது இருக்கட்டும் இதே மாதிரி தமிழ்நாட்டுல நடந்த ரொம்பவே ஆடம்பரமான கல்யாணம் பத்தி உங்களுக்கு தெரியுமா? 1995ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவங்களோட வளர்ப்பு மகன் சுதாகருக்கு கோடி கணக்குல செலவு செய்து நடந்த திருமணம் தான் அது. இந்த திருமணம்தான் ஜெயலலிதாவுக்கு பிற்காலத்துல மிகப் பெரிய ஆப்பாவும் அமைஞ்சதுன்னு சொல்லலாம். சுதாகரன் திருமண நிச்சயதார்தத்துக்கு மட்டுமே 8 லட்சம் மதிப்பிலான நகைகளை குறித்த வழக்கு உள்ளிட்ட சொத்துகுவிப்பு வழக்குகள் ஜெயலலிதாவோட அரசியல் பாதையில இன்னைக்கு வரைக்கும் அழிக்க முடியாத கருப்பு புள்ளியாவே தான் இருக்கு. காதல், புரிதல் மையமா இருக்க வேண்டிய இடத்துல இது போன்ற திருமணங்கள் வணிக ஒப்பந்தங்களுக்கு நிகராக மாறிப் போகுது என்பதே பரவலான கருத்தா இருக்கு. உங்களோட பார்வையில பிரம்மாண்டமான திருமணங்கள் சிறந்ததா எளிமையான திருமணங்கள் சிறந்ததா என்பதை கமெண்ட்ல சொல்லுங்க. -ஷைனி மிராகுலா

துணி துவைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க..

0
அன்றாட வாழ்க்கைல ரொம்பவே முக்கியமான விஷயம் ஆடைகள். அந்த ஆடைகளை எப்படி பராமரிக்குறது ? துணிகளை துவைக்கும் போது நாம செய்ற தவறுகள் என்ன? சரியாக துவைக்கும் முறைகள் என்ன? இதை பத்தி...

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
அரசு தரப்பிலிருந்து ஏதேனும் உதவியோ, மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு, நிதி உதவி போன்ற உதவிகள்  கிடைக்க ரேஷன் கார்டு தேவைப்படும். ரேஷன் கார்டு இல்லை என்றால் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்காது. 3 கோடி குடும்ப ரேஷன்...

இந்த மாதிரி முதுகு வலிக்குதா… உடனே மருத்துவரை பாருங்க

0
விளையாட்டு போட்டிகள்ல தீவிர பயிற்சி எடுக்குறவங்க, சண்டை பயிற்சிகள்ல ஈடுபடுறவங்க இவங்களுக்கு மட்டும் இல்லாம சாதாரணமா பள்ளி கல்லூரிகளுக்கு போய்ட்டு வர்ற மாணவர்களுக்கு முதுகுவலி ஏற்படுறது ரொம்பவே பரவலான நிகழ்வா மாறிட்டு வருது. வயசான பிறகு வர்ற இந்த வலிகளெல்லாம் இளம் வயதினருக்கு வர என்ன காரணம் இதை தடுக்குறதுக்கு என்ன செய்யணும் இதை பத்தி தான் இந்த வீடியோவில விரிவா பாக்க போறோம். முதுகுவலியால பாதிக்கப்படுற 80% மக்களுக்கு இருக்குறதுக்கு பேர் Mechanical backpain'ன்னு சொல்லப்படுது. அதாவது, டெஸ்ட் எடுத்து பார்த்தா இவங்களுக்கு தனிப்பட்ட மற்ற பிரச்சினைகள் எதுவும் இருக்காது. இந்த மாதிரியான backpain வர்றதுக்கான முக்கியமான இரண்டு காரணங்கள் என்னன்னா, ரொம்ப நேரம் உட்க்காந்து இருக்குறது. அடுத்தபடியா, சரியான positionல உக்காராம இருக்குறது. ஒரு சிலருக்கே முதுகெலும்பு டிஸ்க் சம்பந்தமானது மற்றும் ஜவ்வு கிழிதல் மாதிரியான பிரச்சினைகள்னால வலி ஏற்படலாம். laptop இல்லன்னா computer முன்னாடி உக்காந்து வேலை செய்யும் போது, திரையில தெரியுற முதல் வரிக்கு நேரா உங்க கண்ணு இருக்க மாதிரி உங்க sitting position இருக்கனும். கீழ்முதுகுக்கும் நாற்காலிக்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது. கைகளுக்கு சரியான support கிடைக்கணும். அதேமாதிரி computerஓட keyboard, mouse, மணிக்கட்டு ஆகிய மூணும் ஒரே வரிசைல இருக்கணும். அதிகமான தூரம் தினமும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுறவங்களுக்கும் முதுகுவலி வர்றது ரொம்பவே common. பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் முதுகுவலியை குறைக்க 2010ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட (யார் பரிந்துரை செய்தது?) விதிப்படி, மாணவர்கள் தங்களோட எடையில் 10 சதவீத எடையை மட்டுமே புத்தகப் பை எடையா சுமந்து போகணும். புத்தகப்பையை ரெண்டு பக்கமும் மாட்டணும். இதுனால ஒரு பக்கம்  சுமை ஏறும் வகையில இருக்குறது தவிர்க்கப்படும். நிறைய பேர் முதுகுவலி மற்றும் கழுத்து வலிக்காக belt ஒன்னு போட்டுட்டு தங்களோட வேலையை தொடர்ந்து செஞ்சுட்டே இருப்பாங்க. இந்த பெல்ட் உண்மையிலேயே எப்படி வேலை செய்துன்னு பாத்தா, தசை செய்ற வேலையை பெல்ட் செஞ்சுட்டு இருக்கும். ஆனா, இப்படி பெல்ட்டையே தொடர்ந்து யூஸ் பண்ணிட்டு இருக்கும் போது தசை மீண்டும் வலுவடையாது. வலி தீவிரமாக இருக்கும்போது மட்டுமே பெல்ட் யூஸ் பண்ணிட்டு, வலி குறைஞ்ச பிறகு மருத்துவர் பரிந்துரைக்குற சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை எடுத்துக்கிட்டா தான் தசை மறுபடியும் வலுப்பெற்று அதோட இயல்பான வேலையை செய்ய தொடங்கும். நீண்ட நாட்களாக இருக்கும் முதுகுவலி மற்றும் முதுகுவலி கால் வரைக்கும் பரவுறது, மரத்து போறது,  எடையிழப்பு, காய்ச்சல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தா மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மிதமான தொடர் முதுகுவலிகளுக்கு physiotherapist கிட்ட தேவையான பயிற்சிகள் பெற்று பலன் பெறலாம். மற்றபடி அப்பப்ப வந்துட்டு போற முதுகுவலிக்கு சூழலியல் மாற்றங்களை செஞ்சாலே பெரிய வித்தியாசத்தை உணர முடியும். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் உக்காந்து இருக்குற positionஅ மாத்தணும். உடலை சுறுசுறுப்பா வச்சுக்குறது, தேவையான ஓய்வு என இரண்டையும் சமச்சீரா பராமரிக்குறது முதுகுவலி பிரச்சினைல இருந்து விரைவில் தீர்வு காண உதவும். -ஷைனி மிராகுலா

ஆதார் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு! முக்கிய தகவல்…

0
நமது அன்றாட வாழ்வில் அடிப்படையான விஷயங்களில் ஒன்று ஆதார் கார்டு. ஆதார் கார்டு என்பது இந்தியர்களின் தனிப்பட்ட அடையாள ஆவணம் ஆகும். தகுதியுள்ள நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் ஆதார் மூலமாக வழங்கப்படுகின்றன. ஆதார் கார்டு...

Recent News