துணி துவைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க..

245
Advertisement

அன்றாட வாழ்க்கைல ரொம்பவே முக்கியமான விஷயம் ஆடைகள். அந்த ஆடைகளை எப்படி பராமரிக்குறது ? துணிகளை துவைக்கும் போது நாம செய்ற தவறுகள் என்ன? சரியாக துவைக்கும் முறைகள் என்ன? இதை பத்தி தான் இந்த வீடியோவில டீடைலா பாக்க போறோம்.

துணிகளை புதுசு மாதிரி பாதுகாக்க அதை துவைக்குற, அலசுற மற்றும் உலர்த்துற விஷயத்துல கவனம் கொடுக்குறது ரொம்பவே முக்கியம். அடிக்கடி யூஸ் பண்ற சிந்தடிக் மற்றும் காட்டன் ரகங்களை கையிலோ வாஷிங் மெஷினிலோ போட்டு சாதாரணமா துவைக்கலாம். சோப்பு, சோப்புத்தூள், லிக்விட் இதெல்லாம் அதிகமான அளவு யூஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல. அதிகப்படியான டிடெர்ஜென்ட் பொடி துணிகளோட நூலிழைகளை பாதிச்சு பழசு போன்ற தோற்றத்தை ஏற்படுத்திடும் என்பதால போதுமான அளவு மட்டுமே அவைகளை பயன்படுத்துறது நல்லது.

அதே மாதிரி துணிகள்ல இருக்க டிடெர்ஜென்ட் முழுமையா போகுற அளவுக்கு தண்ணில அலசனும். துணிகள்ல திட்டு திட்டா தெரியாம இருக்கவும், சரும பாதிப்புகளை தவிர்க்கவும் இதுல கண்டிப்பா கவனம் செலுத்தணும். துணிகளை அதிகபட்சமாக 30 நிமிடங்களுக்கு மேல ஊறவைக்க கூடாது. வெள்ளை நிறமான துணிகளை தனியா ஊற வைக்கணும். வெள்ளை நிற ஆடைகள்ல Whitener, Chlorine bleach போன்றவற்றை யூஸ் பண்றதுனால, பளிச் என்ற தோற்றம் கிடைக்கும்.

இதே போன்ற productsஅ கலர் துணிகள்ல பயன்படுத்தினா சாயம் போய்டும் என்பதால அதை தவிர்த்துடனும். டஸ்ஸர், லினன் மாதிரியான விலையுயர்ந்த துணிகளின் பராமரிப்புக்கு, `ஃபேப்ரிக் கண்டிஷனர்’களை (Fabric Conditioner) பயன் படுதுறதுனால ஆடைகளுக்கு நல்ல மணமும் பளபளப்பும் கிடைக்கும். சிந்தடிக், காட்டன் மாதிரியான தினசரி உடைகள் தவிர்த்து, பட்டு, சாஃப்ட் சில்க், வேலைப்பாடுகள் கொண்ட டிசைனர் உடைகளை Dry Washக்கு கொடுக்கலாம்.

பட்டுப் புடவை, சாப்ஃட் சில்க் புடவைகளை வீட்டிலேயே அலசும்போது,  ரொம்பவே மைல்ட் ஆன டிடர்ஜென்ட் மட்டுமே பயன்படுத்த னும். இல்லைன்னா, புடவையோட மினுமினுப்பு சீக்கிரமா போய்டும். அதையும் சில நிமிடங்கள் மட்டுமே ஊறவைக்கனும். அடிச்சு துவைக்கவோ கசக்கவோ கூடாது, அலசினாலே போதும். எப்பவுமே ஒவ்வொரு புடவையாக எடுத்து அலச வேண்டும்.

 பல புடவைகளை சேர்த்து ஊற வைக்குறதோ அலசுறதோ கூடாது .

Embroidery, Aari Work இருக்க வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை அழுந்த துவைக்காம லேசாக துவைச்சு நிழல்ல காய வைக்கணும்.  அதிகமா அழுக்காகுற குழந்தைகளோட சாக்ஸ், உள்ளாடைகள் உள்ளிட்ட துணிகளை மெஷினை விட கைகள்ல துவைக்குறது நல்லது. புது துணிகளை போடுறதுக்கு முன்னாடி வெறும் தண்ணில அலசி காய வச்சு பயன்படுத்துறது சிறப்பான அணுகுமுறையா இருக்கும். இதுனால தேவை இல்லாத அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளோட தாக்கத்தை தவிர்க்கலாம். அது மட்டும் இல்லாம, புது துணிகளை இப்படி தண்ணில அலசி பாக்குறது மூலமா, அந்த துணிகள்ல சாயம் போகுதா இல்லையா என்பதையும் தெரிஞ்சுக்கலாம்.  இது மாதிரி சிம்பிள் ஆன வழிமுறைகளை follow பண்ணாலே துணிகள் ரொம்ப நாளைக்கு புதுசு மாதிரி இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஷைனி மிராகுலா