இனி வீட்டு உபயோக சிலிண்டரை 600 ரூபாய்க்கு பெறலாம்!  எப்படி தெரியுமா?

76
Advertisement

தற்போதைய காலகட்டத்தில் கேஸ் சிலிண்டர் இல்லாதவர்கள் வீடே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். எளிமையாகவும்விரைவாகவும் சமையல் வேலைகளை முடிக்கவேண்டிய அவசர உலகத்தில் சுழன்று வருகிறோம்.

நாடு முழுவதும் உள்ள வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. சிலிண்டரின் விலை ஏற்றத்தால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். அதிலும் ஏழ்மையான குடும்பத்தினர் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில்தான் பிரதமர் உஜ்வாலா‘ திட்டம், கடந்த 2016 ம் ஆண்டு மே 1  ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

இதில் 10 கோடிக்கும் அதிகமான நுகர்வோர்கள் குறைவான விலையில் கேஸ் சிலிண்டர்களை பெற்று பயனடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மத்திய அரசு சார்பாக 300 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் கூடுதலாக 25 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும் என கருத்து தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் உஜ்வாலா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.

இதற்கு தற்பொழுது திரையில் ஒளிபரப்பாகும் (www.pmuy.gov.inஇணையதள முகவரிக்கு சென்று “APPLY FOR PMUY CONNECTION ” என்பதை கிளிக் செய்த பிறகு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் சிலிண்டரை தேர்வு செய்து ஆவணங்களுடன் அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் தமிழிலேயே விண்ணப்பிக்கும் வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 600 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்க தகுதி பெற்றவர் என்றால் சில நாட்களில் அதற்கான பலன்களை பெறலாம்.