பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…

157
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் அமைக்கப்படும் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில்,  திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் S.S.பாலாஜி, படகு குழாம் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.