இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கமா… இந்த உணவுகளை முற்றிலும் தவிருங்கள்!!

243
Advertisement

எல்லோரும் தங்கள் சருமம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சருமத்தின் அழகை அதிகரிக்க மக்கள் பல்வேறு முறைகளையும் பின்பற்றுகின்றனர்.இருப்பினும், வயது அதிகரிக்கும் போது, முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் தோன்றுவது பொதுவானது. ஆனால், சிறு வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால், இதற்குக் காரணம் உங்கள் மோசமான வாழ்க்கை முறை.

எனவே, உங்கள் முகம் இளம் வயதிலேயே முதுமை போல் காட்சியளிக்கக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், சில உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவில் அதிக அளவு சோடியம் உள்ளது. மேலும், உணவு கெடக்கூடாது என்பதற்கு பயன்படுத்தும் கெமிக்கல்களும் இருக்கும். இதனால் தோல் சேதமடைகிறது. சருமத்தில் நீர் தேக்கம், வீக்கம் மற்றும் கொலாஜன் குறைபாடு போன்றவை ஏற்படும். எனவே, பதப்படுத்தப்பட்ட உணவை தினமும் உட்கொண்டால், முகத்தில் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் வர ஆரம்பிக்கும். அதனால்தான் பாஸ்தா போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

நீங்கள் டீ மற்றும் காபி அருந்துவதில் விருப்பமுள்ளவராக இருந்தால், உங்களது இந்த பழக்கம், இளம் வயதிலேயே உங்களை முதுமையாக்கிவிடும். ஏனெனில் காபியில் உள்ள காஃபின் உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகிறது. எனவே, அதிக டீ மற்றும் காபி சாப்பிடுபவர்களின் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படும்.

சர்க்கரை ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். சர்க்கரை உங்கள் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்கிறது, இது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க விரும்பினால், இன்றே உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை விலக்குங்கள்.