குழந்தைகளை பாதிக்கும் செல்போன் ரேடியேஷன்!அதிர்ச்சி தகவல்…

298
Advertisement

ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம்.

செல்போன் போன்களில் இருந்து வெளியேறும் ELECTRIC MAGNETIC RADIATION  என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தானதுதான்.

ஆனால் இந்த ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம். இதை தவிர்த்து, போன் திரைகளில் இருந்து வைலட் கதிர்கள், பேட்டரி வெடிக்கக்கூடும் என்ற ஆபத்து, ஆகிய அனைத்துமே குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது.

நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும். எனவே பெற்றோர்கள் பெரும்பாலான நேரம் போனில் செலவழிக்கும் போது குழந்தைகளும் அதையே தான் பின்பற்றும்.

ஆனால் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோமேக்னடிக் ஃபீல்ட் என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவர்களுடைய உடல் அமைப்பு மற்றும் உடல் உறுப்புகளில் கூட பாதிப்புகளை உண்டாக்கும். இதன் பெயர் மைக்ரோவேவ் ரேடியேஷன் என்று கூறப்படுகிறது.

குழந்தைகள் பிறந்து சில மாதங்கள் வரை முன்னுச்சி என்று கூறப்படும் குழந்தைகளின் தலையின் மேற்பகுதி மூடாமல் திறந்த படிதான் இருக்கும். குழந்தை வளர வளர தான் அந்த பகுதி மூடும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதி மிகவும் மெலிதாக இருக்கும்.

இதனால் குழந்தைகளின் மூளை பெரியவர்களை விட எளிதாக ரேடியேஷனை உறிஞ்சும் ஆபத்து இருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு முதல் தீவிரமான வளர்ச்சி குறைபாடுகள் வரை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே செல்போன் திரைகளிலிருந்து குழந்தைகளை தள்ளிவையுங்கள்..