ஜூலை 18 கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடக்கம்.
சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகி கலந்தாய்வு முடிந்தபின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர்...
5 புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை காணொலிவாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.171.24 கோடியில் தொழிற்பேட்டை திறப்பு.
முன்னாள் அமைச்சர், சபாநாயகருக்கு கொரோனா
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால்
ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, வேட்புமனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
துரோகத்தின் அடையாளம் OPS – ஜெயக்குமார்
ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓபிஎஸ்தான்; துரோகம் அவரது உடன் பிறந்த ஒன்று; தூங்குவதுபோல் ஓபிஎஸ் நடிக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
OPS பொருளாளர் பதவியில் நீடிப்பாரா நீடிக்க மாட்டாரா...
அக்னிபாத் திட்டம் – மறு ஆய்வு செய்ய வேண்டும்
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்; அக்னிபாத் திட்டம், வரும்கால ராணுவ வீரர்களுக்கு எதிரானது என்றும் அவர்களை ஏமாற்றும் திட்டம் என்றும் மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
அக்னிபத்...
சின்னவர் என்று அழைக்கலாம் – உதயநிதி
என் மீது கொண்ட அன்பால் சிலர் என்னை ‘மூன்றாம் கலைஞர்’, ‘இளம் தலைவர்' என்றெல்லாம் அழைக்கின்றனர்; ஆனால், அவ்வாறு அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே அழைக்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திரும்பிய OPS
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.
டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ்-க்கு சென்னை விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு.
அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்
தனது உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் நலம் விசாரித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
“அதிமுகவினர் ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்”
அதிமுகவினர், திராவிடர் கழகம் 'தாய் கழகம்' என்பதையும் மறந்துவிட்டார்கள், அதிமுகவின் தாயாக இருந்த ஜெயலலிதாவையும் மறந்துவிட்டார்கள் அதிமுக டெல்லியின் 'அடமான திமுக'வாக உள்ளது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.