உள்ளாட்சி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு
உள்ளாட்சி இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.
வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா
ஜனாதிபதி தேர்தல்: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார் யஷ்வந்த் சின்ஹா.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார்.
எனக்கு கொரோனா ஏற்படவில்லை – வைத்திலிங்கம்
எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று மாலை விசாரிக்கிறது
மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு, சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் உத்தரவை எதிர்த்து சிவ சேனா சட்டப்பேரவை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு.
நம்பிக்கை...
தேர்தல் ஆணையத்தில் EPS தரப்பு பதில் மனு
இந்திய தேர்தல் ஆணையத்தில் OPS அளித்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் விதி மீறி கூட்டப்டவில்லை என்று பழனிசாமி தரப்பு விளக்கம்.
வைத்திலிங்கத்திற்கு கொரோனா
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி; தொற்று ஏற்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார் வைத்திலிங்கம்.
“பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்”
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விரைவில் மும்பை திரும்பி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்.
ஆட்சியைக் கவிழ்க்க, பாஜக செய்யும் சதிதான் இத்தனை களேபரங்களுக்கும் காரணம் எனவும்...
சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் OPS
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு; பழனிசாமி தரப்பிற்கு எதிராக சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் பன்னீர்செல்வம்.
கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது; வழக்கை வாபஸ் பெறும்படி கனகராஜின் மனைவியை மிரட்டிய புகாரில் போலீஸார் நடவடிக்கை.