வீடு திரும்பினார் கமல்
முழு உடற்பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை வீடு திரும்பினார் கமல்ஹாசன். வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் விக்ரம் படப்பிடிப்பிற்கு செல்ல உள்ளார்.
ஆஸ்காரில் ஜெய்பீம்
ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட முதல் தமிழ் திரைப்படக் காட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது ஜெய் பீம்.
இருக்கு.. இன்னிக்கு மழை இருக்கு..
தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் 10,11,12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு ஜன.31 வரை விடுமுறை - அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.
ரத்தானது நேரடி வகுப்புகள்
சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேரடி வகுப்புகள் ரத்து; ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின.
முதலமைச்சருக்கு கொரோனா
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி. லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவு.
புதிதாக 2.38 லட்சம் பேர் பாதிப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தொற்றிலிருந்து 1.57 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - மத்திய சுகாதாரத்துறை.
“பட்டினி சாவுகள் – அறிக்கை தருக”
மாநிலங்களில் ஏற்படும் பட்டினி சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் அளிக்கும் தரவுகளை சேகரித்து, அறிக்கையாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
வீடு தேடி தடுப்பூசி திட்டம் தொடக்கம்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அடுத்த 2 வாரங்களில்..
தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது; முகக்கவசத்தை மக்கள் சரியாக அணிய வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்