திருவாரூர் அருகே மாநில அளவிலான குறும்பட போட்டியில் 3ம் இடம் பெற்ற மாவட்ட காவல்துறையின் ஆபத்தை நோக்கி செல்லாதே மகளே குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

45
Advertisement

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் சார்பாக தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு இடையேயான பெண்கள் மற்றும் குழந்தைகள்  பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் இருந்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் இருந்து 45 குறும்படங்கள் அனுப்பப்பட்டன. இந்த போட்டிக்கு காவல்துறையின் சார்பில் “ஆபத்தை நோக்கி செல்லாதே மகளே” என்ற தலைப்பிலான குறும்படம் அனுப்பப்பட்டது.

மாநில அளவிலான இந்த குறும்பட போட்டியில் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் அனுப்பப்பட்ட குறும்படம் முதல் பரிசையும் சான்றிதழையும் பெற்றுள்ளது. இந்த குறும்படம் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.