கொலையா..? தற்கொலையா..? 3 ஆண்டுகள் கடந்து தீரா மர்மமான நடிகரின் மரணம்!

231
Advertisement

இந்தியில், பல ஹிட் படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். சீரியல் நடிகராக இருந்து, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின்பு பாலிவுட்டிற்குள் நுழைந்தவர் சுஷாந்த்.

இந்தியில் வெளியான பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் இருந்த இவர், நன்கு வளர்ந்து வந்த சமயத்தில் தூக்கு போடப்பட்ட நிலையில் தனது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணம் கொலையா? தற்கொலையா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

இதை வழக்காக பதிவு செய்த போலீஸார் இது குறித்து சுஷாந்தின் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். சில சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் கூட இந்த விசாரணைக்கு ஆளாக்கப்பட்டனர். சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலைதான் என கூறப்பட்டது.

ஆனால், இதை சுஷாந்தின் குடும்பத்தினர் நம்ப மறுத்துவிட்டனர்.  இதனால், சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரனை தொடர்ந்தது.இந்த வழக்கின் விசாரணையின் கோணமே பல முறை மாற்றப்பட்டு விட்டது. ஆனால், இன்று வரை சுஷாந்த் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

சுஷாந்த் கடைசியாக ‘தில் பேச்சரா’ என்ற படத்தில் நடித்திருந்தார், அதற்கு முன்னர் ‘சிக்கோர்’ என்ற படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் தனது மகனுக்கு அட்வைஸ் செய்யும் அப்பாவாக நடித்திருந்தார்.

இப்படம், அதுபோன்ற தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு பாசிடிவ் அட்வைஸ் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. இதனால், சுஷாந்தின் ரசிகர்கள் அவர் தற்கொலை செய்துவிட்டார் என்ற போலீஸாரின் கூற்றை நம்ப மறுக்கின்றனர்.