மிரட்டும் வடிவேலு! அரிவாளுடன் ஓடும் உதயநிதி : மாமன்னன் படத்தின் புதிய போஸ்டர்…

253
Advertisement

மாமன்னன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு டிரெய்லர் குறித்து அறிவித்துள்ளார்.

இந்த போஸ்டரில் வடிவேலுவின் புகைப்படமும், கையில் அரிவாளுடன் ஓடும் உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.மேலும், மாரி செல்வராஜ் தனது படங்களில் குறியீடாக பயன்படுத்தும் வேட்டை நாய்கள் புதிய போஸ்டரில் சீறிப் பாய்கின்றன.

மிரட்டலாக உருவாகியுள்ள இந்த போஸ்டர், உதயநிதி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.இதேவேளை, இதுவரை நகைச்சுவையில் மட்டுமே கலக்கி வந்த நடிகர் வடிவேலுவுக்கு மாமன்னன் தனி அடையாளம் கொடுக்கும் போஸ்டர்களை பார்த்தாலே தெரிகின்றது.