அரசு பேருந்துல பயணிச்சா 10,000  ரூபாய்…அடிக்கப்போகும் JACKPOT… 

50
Advertisement

பேருந்து போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தம், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், கிளம்பாக்கம் கோயம்பேடு பாஸ் ஸ்டாண்டு பஞ்சாயத்துன்னு எல்லாம் ஓரளவுக்கு settle ஆகி, பேருந்து போக்குவரத்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி இருக்குன்னு தான் சொல்லணும். பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்கள் போன்ற தருணங்கள்ல தான் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செய்து பயணிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும்.

சாதாரண வார நாட்களின் போதும் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செஞ்சு பயணிக்குறவங்களோட எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக போக்குவரத்து துறை ஒரு அட்டகாசமான முன்னெடுப்பை கையில் எடுத்து இருக்கு. நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி பயணிக்குற பயணிகள்ல இருந்து, மாதத்திற்கு மூணு பேரை குலுக்கல் முறையில தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 10,000 ரூபாய் பரிசா வழங்கப்படும் அப்படின்ற அறிவிப்பு வெளியாச்சு.

அந்த வகையில ஜனவரி மாதத்துக்கான மூன்று வெற்றியாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்னைக்கு தேர்வு செஞ்சு இருக்காரு. எஸ்.இசக்கி முருகேசன், கே.சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய மூணு பேருக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் அப்படின்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இவர்களுக்கு சீக்கிரமா இந்த பணம் அளிக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்க நேரத்துல, போக்குவரத்து துறையோட இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிஞ்சுட்டு வருது.