ராணுவ வீரர்களின் ஃபிட்னஸ்… அதிர்ச்சி ஆன பாதுகாப்புத்துறை… பறந்த ‘சீக்ரெட்’ உத்தரவு…

60
Advertisement

ராணுவ வீரர்கள் என்றாலே ஹைட் அண்ட் வெயிட்டான அவர்களின் கம்பீரமான உடல்தோற்றம்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியெல்லாம் செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பார்கள்.  அப்படின்னு…. நாம நம்பிக்கிட்டிருந்தோம். ஆனா, அந்த நம்பிக்கையில கொஞ்சம் கீறல் விழுந்திருக்குன்னு சொல்லலாம். அதாவது, சமீப காலமாக ராணுவ வீரர்களின் உடல் தரம் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் பாதுகாப்புத்துறைக்கு கிடைச்சிருக்கு.

இதனால, ராணுவ வீரர்களின்  உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை,  நோய்களோட அதிகரிப்புன்னு கருத்தில் கொண்டு, புதிய உடற்பயிற்சி கொள்கையை இந்திய ராணுவம் கொண்டு வந்திருக்காம். இந்த புதிய உடற்பயிற்சி கொள்கை தொடர்பாக அனைத்து படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கொள்கையில் தற்போதுள்ள சோதனைகளுடன் கூடுதலாக மேலும் சில பரிசோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் உள்ள  வெவ்வேறு வயதினருக்கான உடல் தர நிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 28 வயது முதல் 48 வயது வரை மற்றும் அதற்கு மேலான வயதுடைய ராணுவ வீரர்களுக்குக் குறைந்த பட்ச எடையளவு, அதிகபட்ச எடையளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  இதில், BPET (Battle Physical Efficiency Test) எனப்படும் போர் உடல் திறன் தேர்வில் தனிநபர்கள் 5 கிமீ ஓட்டம், 60 மீட்டர் ஓட்டம் (ஸ்பிரின்ட்- அதாவது விரைவு ஓட்டம்), செங்குத்தான கயிற்றில் ஏறுதல், கிடைமட்ட கயிற்றில் ஏறுதல், 9 அடி பள்ளத்தை வயது அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கடந்து செல்லுதல் உள்ளிட்ட தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.  PPT எனப்படும் Physical Proficiency Tests உடல் திறன் தேர்வில் 2.4 கிமீ ஓட்டம், 5 மீ ஷட்டில் ரன், புஷ்-அப், சிட்-அப், 100 மீட்டர் ஸ்பிரின்ட் ஓட்டம், நீச்சல் உள்ளிட்ட தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.  இந்த தேர்வுகளின் முடிவுகள் வருடாந்திர ரகசிய அறிக்கையில் இடம் பெறும் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய கொள்கையின்படி, அதிக எடை கொண்ட ராணுவ வீரரின் உடல் தகுதியில் 30 நாட்களுக்குள், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், ராணுவ ஒழுங்குமுறை  மற்றும் ராணுவச் சட்டம்  ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிரடி உத்தரவு போடப்பட்டதா, ராணுவ  வட்டாரத்துல சொல்லப்படுது.

இந்தமாதிரி, ஃபிட்னெஸ் தொடர்பான விஷயங்கள் நம்பளை எல்லையிலிருந்து காப்பத்துற ராணுவ வீர்களுக்கு மட்டும் இருந்தா போதுமா? நம்ப கூடவே இருந்து நம்பள காப்பத்துற போலீஸ்க்காரர்களுக்கு பொருந்தாதா? போலீஸ்க்காரங்கன்னாலே தொப்பை இருக்கக்கூடாதுங்குற கருத்து மறைஞ்சுபோயி, போலீஸ் காரங்க என்றாலே தொப்பை இருக்கும்னு மீம்ஸ் போடுறது தொடர்ந்துக்கிட்டேதான். அதனால்,  ராணுவ வீர்களின் உடல் தகுதி தொடர்பா எடுக்கப்பட்ட நல்ல நடவடிக்கையை நம்ப ஊரு போலீஸ்க்காரங்களுக்கும் கொண்டுவரணும் அப்படிங்குறது ஒட்டுமொத்த மக்களோட கோரிக்கையா இருக்கு.