“ஃபேக் மெசேஜ்”-களை கண்டுபிடிப்பது எப்படி?

104
Advertisement

தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வழிகளில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக, செல்போன்கள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி  ஏமாற்றும் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. அதுபோன்ற மோசடிக்காரர்கள் இடமிருந்து உங்களுக்கு வரும் போலி மெசேஜ்களை எப்படி கண்டுபிடிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்….

மோசடி செய்பவர்கள் போலியான மெசேஜ், அழைப்புகள், இமெயில் போன்றவற்றை அனுப்பி ஒருவரது வங்கிக் கணக்கு குறித்த விவரங்களைப் பெற்று பணத்தை திருட முயற்சிக்கின்றனர்.  எனவே, இத்தகைய போலி மெசேஜ்கள், அழைப்புகளை அலட்சியமாக எடுத்துக்கொண்டால், நாம் பணத்தை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் இத்தகைய மோசடிக்காரர்கள் வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வருவது போல மெசேஜ்களைத் தவறாக சித்தரித்து அனுப்புவார்கள். எனவே முதலில் உங்களுக்கு வரும் மெசேஜ் எந்த எண்ணிலிருந்து வருகிறது என்பதைப் பாருங்கள்.

வங்கிகளிடமிருந்து வரும் மெசேஜ்கள் அனைத்தும் அந்த குறிப்பிட்ட பேங்கின் பெயரைப் போட்டுதான் வரும். எந்த தனிப்பட்ட எண்ணிலிருந்தும் வங்கிகள் மூலம் மெசேஜ் அனுப்பப்படாது. எனவே, தனிப்பட்ட எண்ணிலிருந்து வங்கி சார்ந்த குறுஞ்செய்திகள் வந்தால் அவற்றை நம்ப வேண்டாம். அதேபோல உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளில் பிழை இருக்கிறதா என வாசித்துப் பாருங்கள். ஏனெனில் வங்கிகள் மூலம் அனுப்பும் குறுஞ்செய்திகள் துல்லியமாக பிழையின்றி இருக்கும். மோசடிக்காரர்கள் தானாக எழுதும் மெசேஜ்களில் பிழை இருக்கும் என்பதால் அவை போலியானவை எனத் தெரிந்து கொள்ளலாம்.  குறிப்பாக, உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது என வரும் எந்த மெசேஜ் மற்றும் அழைப்பையும் நம்ப வேண்டாம். ஏனெனில் அது நிச்சயம் போலியான மெசேஜாகத்தான் இருக்கும்.

வங்கிகளில் இருந்து ஒருபோதும் உங்களுக்கு இலவசமாக பரிசு கொடுக்க மாட்டார்கள். அதே நேரம் தவறுதலாக கூட அவர்கள் அனுப்பும் மெசேஜில் இருக்கும் லிங்குகளை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டாம். அதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட விபரங்கள் அனைத்தும் திருடப்படும் வாய்ப்புள்ளது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்கு வருவது போலியான மெசேஜ் தானா என்பதை அறிந்துகொள்ளலாம்…