இன்னும் ACCOUNT-க்கு பணம் வரலையா?வீட்டுக்கு முன்னாடிஎடுத்தபோட்டோ அனுப்பனுமாம்… முக்கிய தகவல்…

369
Advertisement

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இது குறித்தான மேலும் சில விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சமீபத்தில் மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கிவிட்டு சென்றது என்றுதான் சொல்ல வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டமக்களுக்கும் வெள்ளநிவாரணம் 6000 ரூபாய் அறிவிக்கப்பட்டது.

டோக்கன் கொடுத்து, அவரவர் ரேஷன்கடைகள் மூலம்ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்..இந்த பணிகள் ஓரளவு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் விண்ணப்பித்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

5.55 லட்சம் பேர் இந்த நிதிக்காக விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் வருமானவரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும், அவர்களது வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது அவர்களது உடைமைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அவர்கள் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்று அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. அதனால்தான், புதிதாக ஒரு செயலியை உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகிறார்கள்.

அதன்படி, ஆதார்நம்பர், வங்கிக்கணக்குநம்பர், செல்போன்நம்பர் பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் போட்டோவையும் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அதன்படி ரேஷன்கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி தந்தவர்களை, அவர் வீட்டு அருகிலேயே நிறுத்தி போட்டோ எடுக்கும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பணிகள் முடிந்தபின்பு தான் பணம் அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது .