கமல் ஹாசனுக்கும் மாயாவுக்கும்..விளாசிய நெட்டிசன்ஸ்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்

107
Advertisement

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவிற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு என சொல்லலாம். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகியுள்ளார். விக்ரம் படத்தில் நடித்தது மற்றும் சில காரணங்களுக்காக போட்டியில் கலந்து கொண்ட மாயாவிற்கு கமல் சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சின்னத்திரை பிரபலங்களான புகழ் மற்றும் குரேஷி கலந்து கொண்டனர்.

ரியாலிட்டி ஷோவை மையமாக வைத்தே காமெடி concept எடுத்து இருந்த நிலையில், புகழ் கேள்வி கேட்க  கமல் ஹாசன் குரலில் குரேஷி பதிலளித்து இருந்தார். உங்களுக்கும் மாயாவுக்கும் என தொடங்கி, புடிச்ச இடம் மாயவரம் என்பது வரைக்கும் மாயாவையும் கமலையும் வைத்து செய்த இந்த நகைச்சுவை கமல் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் அமைந்தது. இதையடுத்து, சமூகவலைதளங்களிலும் கமல் ரசிகர்கள் புகழ் மற்றும் குரேஷிக்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்களுக்கு புகழ் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். கமல் ஹாசனை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், இது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்றும் தனது வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து குரேஷியும் தனது மன்னிப்பு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இருவரது மன்னிப்பு வீடியோக்களும் வைரலாகி வரும் நிலையில், திரைத்துறையில் மூத்த நடிகர் ஒருவரை பற்றி இப்படியா யோசிக்காமல் பேசுவார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.