Wednesday, July 2, 2025

திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு அப்பா ஆகும் ராம் சரண்! குடும்பத்தினர் உற்சாகம்…

சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தெலுங்கு திரையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆன நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் இவரது மனைவி உபசனாவிற்கு அடுத்த வாரத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்மையில் அவருக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சூழ வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில், குழந்தை 16ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதிக்குள் குழந்தை பிறக்கும் என கூறப்பட்டு இருப்பதால் குடும்பத்தினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news