ஜூன் 22ஆம் தேதி ரசிகர் செய்த செயல்..கைப்பட கடிதம் எழுதிய விஜய்! இணையத்தில் வைரல்

1105
Advertisement

கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அன்று, பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்த விஜய், 12 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக விழாவை நடத்தி கவனம் ஈர்த்தார்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அவரவர் மாவட்டத்தில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ECR சரவணன் நான்கு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதை அறிந்து, விஜய் அவருக்கு கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

உங்களது சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என விஜய் குறிப்பிட்டு எழுதியுள்ள இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.