தளபதி 68 படத்தில் அதிரடி மாற்றம் செய்த வெங்கட் பிரபு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

1114
Advertisement

‘லியோ’ படம் வெளிவருவதற்கு முன்னே, வெங்கட் பிரபு இயக்கவுள்ள விஜயின் 68வது படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கம், AGS Entertainmet தயாரிப்பு, யுவன் இசை என ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படக்குழு அமைந்துள்ளது.

அவ்வப்போது தளபதி 68 படத்தை பற்றிய தகவல்கள் வலைதளங்களில் வட்டம் அடித்த வண்ணம் உள்ளன. அண்மையில், படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

படப்பிடிப்பு கூட தொடங்காத நிலையில், படத்தை பற்றிய தகவல்கள் வெளியாவதால் எரிச்சல் அடைந்த வெங்கட் பிரபு, உதவி இயக்குனர்களை வெகுவாக கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்களில் யாரோ ஒருவர் மூலம்தான் இந்த விஷயம் லீக் ஆகி இருக்கிறது. எனவே இனி யாரும் வீட்டுக்கு போகக்கூடாது அலுவலகத்திலேயே தங்கிவிடுங்கள் என ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.