விஜய் படத்தில் வாய்ப்பு கொடுத்த லோகேஷிற்கு நன்றி கூறிய இலங்கை பெண் ஜனனி! வைரலாகும் பதிவு..!

147
Advertisement

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டதாக பிக் பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், லியோ திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் நடித்தது தனக்கு மிகவும், சிறப்பான ஒரு அனுபவம் என்றும் பிக் பாஸ் புகழ் ஜனனி கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதேவேளை, லியோ திரைப்படத்தின் ஜனனி நடிப்பதாக தகவல் வெளிவந்திருந்த நிலையில் அவரின் கதாபாத்திரங்கள் மிகவும் ரகசியமான வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.