ரோட்டோர கடையில் நின்று குல்பி ஐஸ் சாப்பிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு..

190
Advertisement

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் நாடு முழுவதும் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர் என்பதும் சமீபத்தில் அவர்கள் டெல்லி சென்றதும் பார்த்தோம். இந்த நிலையில் டெல்லியில் உள்ள சாலையோர கடைகளில் ’பொன்னின் செல்வன்’ குழுவினர் குளுகுளு குல்பி சாப்பிட்ட கியூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் ’பொன்னியின் செல்வன்’ படத்தை புரமோஷன் செய்த சமீபத்தில் இந்த படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் சென்று இருந்தனர் என்பது குறித்த புகைப்படங்கள் வைரலாகின என்பதையும் பார்த்தோம்…