செந்தில் பாலாஜியை நான் டார்கெட் செய்வது உண்மைதான்.. அதுக்கு காரணம் இதுதான்..

1163
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியை தான் ‘டார்கெட்’ செய்வது ஏன் என்று பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை சமூகத்துக்கே எதிரி என்றும் அவர் கூறியுள்ளார்.முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி மீது வருமான வரித்துறை மேற்றும் அமலாக்கத்துறையின் கவனம் திரும்புவதற்கு யூடியூபர் சவுக்கு சங்கரும் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.


கடந்த சில மாதங்களாகவே டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடு, செந்தில் பாலாஜி தனது ஊரில் அரண்மனை போல பங்களா கட்டி வருவது போன்ற தகவல்களை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார் சவுக்கு சங்கர். இந்த சூழலில், ஒரு யூடியூப் செனலுக்கு சவுக்கு சங்கர் நேற்று பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏன் நீங்கள் டார்கெட் செய்கிறீர்கள் என நெறியாளர் கேள்வியெழுப்பினார்.