கட்சி அறிவிச்சாரு ஓகே..பெயரையும் மாத்திட்டாரே விஜய்! இந்த ட்விஸ்ட்டை கவனிச்சீங்களா?

217
Advertisement

இப்ப அப்பன்னு கடைசியில ஒரு வழியா விஜய் நேரடியா அரசியல் களத்துல இறங்கிட்டாரு. நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடுவாரா? கட்சி பேர் என்ன? அப்படின்ற எல்லா கேள்விகளுக்கும் பதிலா அமைஞ்சுருக்கு விஜய் வெளியிட்டு இருக்க அறிக்கை. ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்குறதை அறிவிச்ச விஜய்யை ரசிகர்கள் கொண்டாடி வர சூழல்ல, அரசியல் வட்டாரங்கள்ல கலவையான விமர்சனங்களே வந்துட்டு இருக்கு.

நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடாதப்ப, எதுக்கு இப்ப அவசரமா கட்சி பெயரை வெளியிடனும்னு சிலர் கேள்வி எழுப்ப, கட்சியை சிறப்பா தயார்படுத்த இது ஒரு சிறந்த யுக்தியாவும் பாக்கப்படுதுன்னு நிர்வாகிகள் தரப்பு சொல்லுது. அது மட்டும் இல்லாம, விஜய் தான் கட்சி தலைவர் என்பது அறிக்கையில தெளிவா குறிப்பிடப்பட்டிருக்கு. மக்களுக்கான நலத்திட்டங்களும் சமூக சேவைகளும் செஞ்சுட்டு வந்தா கூட, முழுமையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வர அரசியல் அதிகாரம் வேணும்னும் அந்த அறிக்கையில குறிப்பிட்ருக்காரு விஜய்.

இன்னொரு விஷயம் என்னன்னா, தன்னை ஜோசப் விஜயா அடையாளப்படுத்திக்காம வெறும் விஜய் அப்படினு தான் அறிக்கையில mention பண்ணி இருக்காரு விஜய். தளபதி, இளையதளபதி அப்படின்ற எந்த பட்டமும் சேக்காம, ஜோசப் விஜய் அப்படின்ற முழு பெயரும் இல்லாம வெறும் விஜய்னு போட்டதுக்கு என்ன காரணமா இருக்கும்னு நெட்டிசன்கள் அலசி ஆராஞ்சுட்டு இருக்காங்க. முன்னதாக ஜோசப் விஜய் என்ற பெயருக்காகவே பாஜகவினர் கிட்ட பல பஞ்சாயத்துகளை face பண்ண விஜய், அந்த பெயரையே நீக்கிட்டு சுமூகமா அரசியல் பண்ண பாக்குறாரான்னும் கமெண்டுகள் வந்தபடி இருக்கு.