நெருங்கும் தேர்தல்…அரசியல் கட்சிகளுக்கு பணம் வருவது எப்படி?

83
Advertisement

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிட்டே வர்ற சூழல்ல, ஆட்சியை புடிக்க பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக பலக்கட்ட வியூகங்களை வகுத்து விறுவிறுப்பா செயல்பட்டு வராங்க. அது இருக்கட்டும், தேர்தலை சமாளிக்க கட்சிகளுக்கு இவ்ளோ பணம் எப்படி வருது? அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்குறவங்களுக்கு என்ன நன்மை? அப்படின்றததான் இந்த தொகுப்புல தெரிஞ்சுக்க போறோம்.

சாதாரண தனிநபர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குறதால வருமான வரி சிக்கல் வருமா அப்படின்னு குழப்பம் இருக்கும். 80GGC வருமானவரி சட்டப்பிரிவுப் படி, தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்குற நன்கொடைக்கு வரி விலக்கு கிடைக்கும். அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல்  அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்குறதை எளிமையாக்கும் வகையில் இந்த சட்டப்பிரிவு அமைஞ்சுருக்கு. ஆனாலும், இந்த சட்டப்பிரிவை தவறா உபயோகப்படுத்த கூடாது என்பதற்காகவும், அரசியல் கட்சிகளோட வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் நன்கொடை அளிக்குறதுல சில நிபந்தனைகளும் இருக்கு.

இந்தியாவுல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அறக்கட்டளைகளுக்கு அளிக்கும் நன்கொடைல தான் வரி விலக்கு claim பண்ண முடியும். வரி விலக்கு கோர, நன்கொடை பெறும் அரசியல் கட்சி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29Aஇன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கணும். அதே மாதிரி, தேர்தல் அறக்கட்டளைகள், நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 8 இன் கீழ உருவாக்கப்பட்ட லாபநோக்கம் இல்லாத நிறுவனமா இருக்கணும். தேர்தல் அறக்கட்டளைகள் நன்கொடைகளை வாங்கி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கலாம்.

முறையாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கும்போது வரி விலக்கு கோரலாம். ஆனா, வழங்கப்படுற நன்கொடையானது, நன்கொடை வழங்குறவரோட மொத்த வருமானத்தை விட அதிகமா இருந்தா வரி விலக்கு கிடையாது. ரொக்கமா வழங்குற நன்கொடைக்கு வரி விலக்கு கிடையாது.

Cheque, DD அல்லது Internet Banking உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட முறைகள் மூலமா செலுத்துற பணத்துக்கு தான் வரி விலக்கு கிடைக்கும். 2013- 2014இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் படி, பரிசுப்பொருட்களாக வழங்கப்பட்ட நன்கொடைகளுக்கு வரி விலக்கு கிடையாது. நன்கொடை கொடுத்த ரசீது பெறுவது மட்டும் இல்லாம, அந்த ரசீதுல  அரசியல் கட்சியோட PAN, TAN ஆகிய விவரங்கள் இருக்கணும். அதேமாதிரி, 80GGB சட்டப்பிரிவுப்படி நிறுவனங்களும் நன்கொடை அளிச்சு வரி விலக்கு பெறலாம். ஆனா, அரசு நிறுவனங்கள்னால நன்கொடை வழங்க முடியாது.

அது மட்டும் இல்லாம, நிறுவனம் தொடங்கி குறைந்தபட்சம் மூணு ஆண்டு நிறைவு செஞ்சாதான், நன்கொடை வழங்கி வரி விலக்கு கோர முடியும். ஒரு கட்சிக்குன்னு இல்லாம பல கட்சிகளுக்கும் நிறுவனங்கள் நன்கொடை வழங்கலாம். நிறுவனங்கள் சட்டப்படி, நிறுவனங்கள் மூன்று ஆண்டுகள்ல வந்த மொத்த லாபத்துல 7.5% வரைக்கும் நன்கொடை வழங்கலாம். Income Tax Returnsஅ நேரத்துக்கு file பண்ணாமலோ, கேக்கப்படுற documentsஅ submit பண்ணாமலோ இருந்தா வரிவிலக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.