இத்தனை பேருக்கு 1,000 ரூபாய் கிடைக்க போகுதா? 

163
Advertisement

2024 – 2025ஆம் வருடத்துக்கான தமிழ்நாடு அரசோட பட்ஜெட்,  சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கு. நிதி நிலை அறிக்கையில பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில, மாணவ மாணவியருக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரொம்பவே கவனம் ஈர்த்து இருக்கு. மாணவ மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும்? இதை பற்றித் தான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்புல இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் அரசுப்பள்ளிகள்ல படிக்குற மாணவர்களுக்குத்தான் இந்த திட்டம் மூலமா பலன் கிடைக்கப் போகுது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்குற மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கு.

இது மாணவர்கள் பாடப்புத்தகங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் வாங்கி படிச்சு, கல்வித்தரத்தை இன்னுமே உயர்த்திக்க வழி வகுக்கும்னு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறாரு. இந்த பணமானது வங்கிக்கணக்குகள்லயே நேரடியா செலுத்தப்படும்னு சொல்லி இருக்க, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை வர்ற நிதியாண்டுல இருந்து செயல்படுத்த 300 கோடி ரூபாய் வரைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு.

இதே போல அரசு பள்ளிகள்ல உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குறது தான் புதுமைப்பெண் திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு. பொருளாதார ரீதியா பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி படிக்குறதை உறுதி செய்யும் வகையில தான் 2022ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுச்சு.

இதுவரைக்கும் இந்த திட்டத்துல சேர்ந்து சுமார் ரெண்டு லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று வர்றதா சொன்ன நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த திட்டத்தை அறிமுகம் செஞ்ச பிறகு உயர்கல்வியில முதலாமாண்டு சேரும் மாணவிகளோட எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரிச்சு இருக்கிறதா பதிவு செஞ்சு இருக்காரு.

இது மட்டுமில்லாம உயர்கல்வியை தொடர விரும்புற மூன்றாம் பாலினத்தவரோட கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் முழுவதையும் அரசே ஏத்துக்கும் அப்படின்ற அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில இடம்பெற்று இருக்கு.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களோட பெயர் மாற்றம் செஞ்சு, திமுக அறிவுப்புகளை மாத்திரம் வெளியிட்டு வர்றதா எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் கருத்து பதிவிட்டிருக்க, கல்விக்காக பட்ஜெட்டில் வெளியான புது திட்டங்களுக்கு வரவேற்பும் கெடச்சுருக்கு.

-ஷைனி மிராகுலா