‘சிறுத்தை’ சிவா கைவண்ணத்தில் ‘கங்குவா’ டைட்டில் டீசரை துவம்சம் செய்த நெட்டிசன்ஸ்

179
Advertisement

‘சிறுத்தை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து மூன்றில் ஒரு பங்கு வெற்றி படங்களை கொடுத்து வருபவர் ‘சிறுத்தை’ சிவா. சூர்யா, திஷா படானி நடிப்பில் சிவா இயக்கி வரும் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்புக்கள் அதிகரித்து வந்த நிலையில், படத்தின் பெயர் ‘கங்குவா’என்பதை டைட்டில் டீசருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. 10 மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ‘கங்குவா’என ஒரு மாவட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த இடத்திற்கும் சரித்திர கால படமாக தயாராகும் இந்த படத்திற்கும் தொடர்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

‘என்னப்பா பேர் இது கங்குவா கங்காருன்னு’ என படத்தின் டைட்டிலையும் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் போஸ்டரில் இருந்த தட்டு கேடயத்தை காப்பி அடிச்சு போட்ருக்காங்க என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கங்குவா திரைப்படம் 2024ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.