தலைவர் 170ல் ரஜினிக்கு வில்லனாக விக்ரமுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கொடுத்த லைகா?

203
Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் நடிக்க சீயான் விக்ரமுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கொடுத்துள்ளது லைகா என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 170 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த படத்தில் ரஜினிக்கு கெத்தான வில்லனை தேடி வந்தார்களாம். இதையடுத்தே சீயான் விக்ரமை அணுகி நீங்கள் தான் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். வில்லனா, நானா என ரொம்ப யோசித்திருக்கிறார் சீயான்.

இதில் யோசிக்க என்ன இருக்கிறது. அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் தான் சரியான ஆள். சட்டுபுட்டுனு சரினு சொல்லுங்க என்றார்களாம். ஓகே சொல்லுங்கள் சீயான், உங்களுக்கு ரூ. 50 கோடியை சம்பளமாக கொடுக்கிறோம் என்றதாம் லைகா நிறுவனம். மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கிறதே என தலைவர் 170 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் விக்ரம்.

ஹீரோக்கள் எல்லாம் விரும்பி வில்லன்களாக நடிக்கத் துவங்கிவிட்டார்கள். நெகட்டிவ் கதாபாத்திரமா நான் நடிக்கிறேன் என்று ஹீரோக்கள் சந்தோஷமாக சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் தான் தன்னை தேடி வந்த வில்லன் வாய்ப்பை ஏற்க யோசித்திருக்கிறார் சீயான் விக்ரம். ஹீரோவாகே பார்த்து மக்கள் பழகி விட்டார்களே, வில்லனாக ஏற்பார்களா என யோசித்திருக்கலாம்.