பிரபு தேவாக்கு இவ்ளோ பெரிய மகனா? அசலாக அப்பா போலவே இருக்காரே! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்

335
Advertisement

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபு தேவா. தமிழ்நாட்டின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபு தேவாவின் நடனத்திற்கே தனி ரசிகர்கள் உண்டு.

‘மின்சார கனவு’ படத்திற்காக சிறந்த நடன இயக்குனர் விருதை பெற்ற பிரபு தேவா, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘எங்கேயும் காதல்’ மற்றும் ‘வெடி’ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

ஹிந்தியில் சல்மான் கானை வைத்து ‘ராதே’ திரைப்படத்தை எடுத்த பிரபுதேவா ‘சுயம்வரம்’ மற்றும் ‘உள்ளம் கொள்ளை போகுதே’ படத்திலும் பாடல்களை பாடியுள்ளார். IPL 16வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், போட்டியை காண, தன்னுடைய மகனோடு வந்த பிரபுதேவாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபு தேவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.