ஆந்திராவில் நடிகை சமந்தாவுக்காக ரசிகர் கட்டியுள்ள கோயில் நாளை திறக்கப்பட உள்ளது…

265
Advertisement

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள அலபாடு கிராமத்தைச்சேர்ந்த தெனாலி சந்தீப் என்பவர் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார்.

இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து பேசியுள்ள சமந்தா, ரசிகர் தெனாலி சந்தீப், நடிகை சமந்தா பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகள் செய்து வருவதை அறிந்ததும், அவர் மீதான மதிப்பு கூடியதாக தெரிவித்தார். அவர் தனக்கு கோயில் கட்ட தீர்மானித்ததாகவும், வீட்டில் கட்டப்பட்டுள்ள கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறுவதாகவும் அவர் கூறினார். தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள் நினைவு சின்னங்கள் எழுப்பும் வழக்கத்தின் ஒரு பகுதியாக, குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஹனிரோஸ் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.