மனைவியுடன் பிரச்சனைனா என்ன செய்யணும்?: விக்கி கௌஷலுக்கு ஐஸ்வர்யா ராய் கணவர் சூப்பர் அட்வைஸ்

261
Advertisement

பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலும், நடிகை கத்ரீனா கைஃபும் காதலித்து கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அந்த கியூட் ஜோடியின் புகைப்படம் எப்பொழுது வெளியானாலும் வைரலாகிவிடும்.

இந்நிலையில் விக்கி கௌஷலுக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் திருமண வாழ்க்கை குறித்து அறிவுரை வழங்கினார்.

அபிஷேக் பச்சனும், விக்கி கௌஷலும் சேர்ந்து மன்மர்சியன் படத்தில் நடித்தார்கள். அப்போழுதில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது.

இந்நிலையில் அபிஷேக் பச்சன் தெரிவித்ததாக விக்கி கௌஷல் தகவல்,
நானும், அபிஷேக் பச்சனும் சேர்ந்து நடித்தபோது தான் அவர் இந்த அறிவுரையை வழங்கினார். நான் தான் ஐஸ்வர்யா ராயிடம் முதலில் மன்னிப்பு கேட்பேன். என்ன பிரச்சனையாக இருந்தாலும் படுக்கச் செல்லும் முன்பு சாரி சொல்லிவிடுவேன். மேலும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மன்னிப்பு கேட்பேன் என்றார் என விக்கி கூறினார்.

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். எந்த பிரச்சனை வந்தாலும் படுக்கைக்கு செல்லும் முன்பு அதை தீர்த்துவிடுவோம். அதையே நினைத்து கோபத்தில் தூங்க மாட்டோம் என ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இந்நிலையில் தான் விக்கி கௌஷலுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்திருக்கிறார் அபிஷேக் பச்சன்.

விக்கி கௌஷல். அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சாராவும், விக்கி கௌஷலும் கலந்து கொண்டனர்.

அந்த செய்தி நிகழ்ச்சியில் ஒருவர் கேட்ட கேள்விக்கு விக்கி கௌஷல் அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துவிட்டது. நம் நாட்டில் திருமணங்கள் கடைசி வரை நிலைத்து நிற்கும். அதை ஒப்புக்கொள்கிறீர்களா இல்லை உங்கள் மனைவி கத்ரீனா கைஃபை விட சிறந்த ஒருவரை பார்த்தால் அவரை விவாகரத்து செய்துவிடுவீர்களா என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.