நாட்டிலேயே முதன்முதலாக சோலார், பேட்டரி, ஹைட்ரஜன் பியூல் மூலம் இயங்கும் ஹைட்ரோ எரிசக்தி படகை கோவை கல்லூரி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்…

207
Advertisement

மொனாக்கோ அரசு ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகு போட்டி நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டி வரும் ஜூலை மாதம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இந்தியா சார்பில் கோவையைச் சேர்ந்த 10மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அதையொட்டி, சோலார், பேட்டரி,  ஹைட்ரஜன் பியூல் மூலம் இயங்கக்கூடிய படகை மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஹைட்ரோ எரிசக்தி படகுக்கு 5 யூனிட் மின்சாரம் போதும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். சர்வதேச ஆற்றல் படகு போட்டியில் 2வது முறையாக பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததற்காக மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.