மீண்டும் பள்ளிக்கு போகலாம்… திருச்சியில் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள்!!

307
Advertisement

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் குறைவதால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் இடையே கோரிக்கை எழுந்தது.இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கோடை வெப்பம் தனியாததால் பள்ளி திறப்பு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால், ஜூன் மாதம் தொடங்கிய பின்னரும் வெப்ப அலை அதிகமாகவே இருந்தது.

தொடர்ந்து பல்வேறு நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி கடந்தது. இதையடுத்து, பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போனது. அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேற்று முன் தினம் (ஜூன் 12) வகுப்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் ஆர்வத்துடன் கல்வி பயில சென்றதை பார்க்கவும். திருச்சியில் பள்ளிக்கு சென்ற குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி புத்தூர் ஈவேரா சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடனமாடி, மலர் தூவி குழந்தைகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.