பெண் தேர்வர்களை அவமானப்படுத்திய TNPSC…அதிர்ச்சியில் தேர்வர்கள்… பதில் சொல்லாத அமைச்சர்…

50
Advertisement

க்ரூப்-4 தேர்வு விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விதான், இதையெல்லாம்கூடவா கேட்பார்கள் என இதுவரை இல்லாத அளவுக்கு பெண் தேர்வர்கள் மத்தியில் அதிர்ப்தியையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இருபாலரும் ஆர்வமுடன் பங்குபெறக்கூடிய போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC.  இதற்கான அறிவிப்பு ஜனவரி 30 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு வெளியானது. அதில் தேர்விற்காக தேர்வர்கள் ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தேர்வர்கள் மும்முரமாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பெண் தேர்வர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. என்னவென்றால் TNPSC குரூப் 4-கு விண்ணப்பிக்கும் பெண் தேர்வர்களுக்கு அவர்களின் உயரம் மற்றும் மார்பளவு போன்றவை முக்கியமாக நிரப்பவேண்டும் படியாக விண்ணப்ப தேர்வு படிவம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

போலீஸ் வேலைக்கான படிவம் என்றால் கூட உயரம் மற்றும் மார்பளவு கேட்பதில் நியாயம் இருக்கிறது. அதிலும், பெண் எஸ்ஐ-க்கு மார்பளவு கேட்கப்படுவதில்லை என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு அதாவது VAO, இளநிலை உதவியாளர,டைப்பிஸ்ட், தனி செயலர் போன்ற பணிகளுக்காக தேர்வெழுதும் தேர்வர்களுக்கு இது போன்ற கேள்விகள் தேவையில்லையே என தேர்வர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழும்பியுள்ளன.

பின்னர் மனிதவள மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர் கண்ணன் என்பவரின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்கள்.  இணைச் செயலாளர் கண்ணனையும் தொடர்புகொண்டது சத்தியம் டிஜிட்டல் குழு. அவரோ, இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சியிடம்தான் பேசவேண்டும் என்று கூறினார். ஆனால், டி.என்.பி.எஸ்.சியின் வெப்சைட்டிலிலுள்ள தொடர்பு எண்களையும் அலுவலக எண்களையும் தொடர்புகொண்டால்  ஃபோனை எடுத்து முறையான பதிலை வழங்க மறுத்துவிட்டார்கள்.

டி.என்.பி.எஸ்.சி அமைப்பானது தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் வருகிறது. அதனால், அத்துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்புகொண்டது சத்தியம் டிஜிட்டல் குழு. வாட்ஸ் ஆப்பில் மெசேஜும் அவருக்கு அனுப்பப்பட்டது. அவரும் தொடர்பில் வரவில்லை.

பெண் தேர்வர்களின் குற்றச்சாட்டுக்கான பதிலை டி.என்.பி.எஸ்.சி அமைப்பிலிருந்து சரிவர அளிக்கவில்லை. யாருமே விளக்கம் அளிக்கவில்லை என்றால் யார்தான் இதற்கு பொறுப்பு? இவர்களுக்கு எதற்கு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம்?

TNPSC 4-இற்கு விண்ணப்பிக்கும் பெண் தேர்வர்களுக்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படக்கூடாது, மேலும் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

-ரிதி