அரசு பணி வழங்காத TNPSC..! ஏக்கத்துடன் காத்திருக்கும் 831 பேர்..!

67
Advertisement

TNPSC சார்பில் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப் பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்பட வில்லை என்னும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 12 வகையான பொறியியல் பணிக்கான 831 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி தேர்வுகள் ஏப்ரல் 4,2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பொறியியல் பணிக்கானதேர்வு ஜூலை 2,2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த தேர்விற்கான முடிவுகள் ஜனவரி 13,2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு அடுத்த சில வாரங்களிலேயே நேர்காணலும் நடைபெற்றது அவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 831 பொறியாளர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணைகள் ஏப்ரல் 17 , 2023 ஆம் ஆண்டு  வழங்கப்பட்டன .ஆனால், பணி ஒதுக்கீட்டு ஆணைகளின் அடிப்படையில் தமிழக அரசு வழங்கப்பட வேண்டிய  பணி நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை என 831 பொறியாளர்களும் வேதனையில் உள்ளனர்.

மேலும் பொறியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் தங்களின் சான்றிதழ்கள் ஏற்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்து வழக்கு தான், காலதாமதத்திற்கு காரணம் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது .ஆனால், அந்த வழக்கில் கடந்த  நவம்பர் 20ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

 அதன் அடிப்படையில் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்குவதாக இருந்தாலும் கூட இந்த நேரம் செய்திருக்க முடியும் ஆனால் இதுவரை உயர் நீதிமன்றம் வழங்கிய 6 வார கெடு விரைவில் முடிய உள்ள நிலையில் அரசு தரப்பில் எதுவும் செய்யப்படவில்லை.

இதனால் 831 பொறியாளர்களும் கலக்கத்தில் உள்ளனர், பணி நியமன ஆணை எப்பொழுது வழங்கப்படும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.இந்த பணி நியமன ஆணைக்காக காத்திருப்பதால் வேறு எந்த வேலைக்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகுவதாக பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தான் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் இடம்பெற்றுள்ள 12 வகையான பணிகளுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.பொறியியல் பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கப்படுமா? 831 பொறியாளர்களின் ஏக்கம் தீருமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.