தனியார் பள்ளிக்கு நிகராக.. மாறப்போகும் சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகள்.. ரெடியாகுது!!!

220
Advertisement

சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரக்கு நிறம், பச்சை, மஞ்சள், ஊதா போன்ற வண்ணங்களில் டி-ஷர்ட் வழங்கப்பட உள்ளது.

இதற்காக சென்னை மாநகராட்சி ரூ.62 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான மணலி, மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 139 அரசுப் பள்ளிகளை எடுத்து சென்னை மாநகராட்சி விரும்பியது.

இது ஒருபுறம் எனில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி , நீட், ஜெய்இ, கிலாட் போன்ற போட்டித் தேர்வுகள் மூலம் வெல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முதல் ஆண்டு கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சியே ஏற்கும்.

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ‘ஸ்நாக்ஸ்’ வழங்கப்படும் . சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். மாலைநேர வகுப்புகளில் பங்கேற்கும் 10 (ம) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவித்த சுண்டல், பயறு வகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கை மாதிரி ஐ.நா.சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தனியார் பள்ளிகளைப் போல சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், 4 வண்ணங்களில் வண்ண டிஷர்ட் வழங்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 81 பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக 4 குழுக்கள் பிரித்து, அவற்றுக்கு அரக்கு, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய வண்ணங்களில் டி-ஷர்ட் கொள்முதல் செய்து வழங்கப்பட உள்ளது.