‘தீயவர் குலைகள் நடுங்க’ படத்தின் மிரட்டலான Second Look போஸ்டர் வெளியீடு.

68

இன்று நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் தீயவர் குலைகள் நடுங்க படத்தின் மிரட்டலான second look போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

ஜிஎஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படப்பிஜையுடன் தொடங்கப்பட்டது. தினேஷ் லட்சுமணன் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராம்குமார் சிவாஜிகணேசன், ஜி.கே.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்னணியில் அழுத்தமான க்ரைம் – த்ரில்லர் பாணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு கூறுகிறது.