பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்

206
puneeth-rajkumar
Advertisement

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். கன்னட பவர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

சென்னையில் பிறந்த புனித் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement