ஆதித்த கரிகாலனுடன் இணைந்த நந்தினி! ரசிகர்களை மிரள வைத்த மணி ரத்னம்….

149
Advertisement

‘நாயகன்’, ‘தளபதி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘குரு’ போன்ற தனித்துவமான பாணியில் படங்களை பதிவு செய்த மணி ரத்னம் இயக்கத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது என சொல்லலாம்.

அதே போல, இவரின் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘ராவணன்’ படத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் ஜோடி கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்தடுத்து வெளியாகிய பொன்னியின் செல்வன் படங்களின் இரண்டு பாகங்களிலும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராயும் நடித்து மீண்டும் ஒரு முறை screen chemistryயை தெறிக்க விட்டனர். இந்நிலையில், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து மணி ரத்னம் மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, கமல் ஹாசன் நடிக்கும் பட வேலைகளில் பிசியாக இருக்கும் மணி ரத்னம், இந்த படத்தை முடித்து விட்டு விக்ரம் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.