இந்தியாவின் இசைக்குயில் என புகழப்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
இந்தியாவில் 3 வது அலை கொரோனா பரவல் காரணமாக திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்(92) உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார்.
கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.