பாலிவுட்டிலும் வேலையை காட்டிய ஜானி மாஸ்டர்! வேட்டி கட்டிய சல்மானை வச்சு செய்த நெட்டிசன்ஸ்…

200
Advertisement

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான  ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் ஜெகபதி பாபு மற்றும் பூமிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு KGF இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பின்னணி இசை அமைக்க, படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட ஐந்து பேர் இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து ‘என்டம்மா’ பாடல் அண்மையில் வெளியாகிய நிலையில், சல்மான் கானின் நடன அசைவுகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ராம் சரண், வெங்கடேஷ் மற்றும் சல்மான் கான் இணைந்து ஆடியுள்ள இப்பாடலில் தமிழர்களின் கலாச்சாரம் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டாலும் நடன அசைவுகள் கொச்சையாக இருப்பதாகவும், தமிழ் கலாச்சாரத்தை அவமதிப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘வாரிசு’ படத்தில் விஜயின் கடின உழைப்புக்கு ஏற்றவாறு ‘ரஞ்சிதமே’ பாடலின் கோரியோ சரியாக இல்லை என ரசிகர்கள் திட்டி தீர்ப்பதற்குள், பாலிவுட் வரை சென்று இந்த தனித்துவமான ஸ்டெப்பை போட்டு கொடுத்ததும் ஜானி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.