நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததால் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிடக்கூடாது என மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே 5 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக பாதுகாப்பு வழங்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளது.