‘வாரிசு’ ஆடியோ லான்ச்சில் என்ன எதிர்பார்க்கலாம்? ட்ரைலர் ரிலீஸ் ஆகுமா?

196
Advertisement

விஜய் நடிக்கும் படங்களுக்கு இணையான வரவேற்பை பெறுவது அவர் படங்களின் ஆடியோ லான்ச். அடுத்தடுத்த பாடல்களை வெளியிட்ட ‘வாரிசு’ படக்குழுவும் டிசம்பர் 24ஆம் தேதி படத்தின் ஆடியோ லான்ச்சை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆடியோ லான்ச் நிகழ்வில், படத்தின் இசையமைப்பாளரான தமன் அனைத்து பாடல்களையும் நேரலையில் perform செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Introduction பாடலுக்கு தமனுடன் அனிருத்தும் இணைந்து கொள்வார் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா ஆடியோ லான்ச்க்கு வருவதை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட நிலையில் ஷாருக்கான், கமல் ஹாசன் மற்றும் மகேஷ் பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் பங்குபெறுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் குட்டி ஸ்டோரியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவதும், விமர்சகர்கள் அரசியல் குறியீடுகளுக்காக அலசுவதும் வாடிக்கை. இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படாமல் புத்தாண்டின் போது தான் ஒளிபரப்பபடும் எனவும் அப்போது ‘வாரிசு’ படத்தின் ட்ரைலரரும் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் அடுத்த படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜும் நிகழ்ச்சிக்கு வர உள்ளதால், தளபதி 67 பற்றிய புதிய அப்டேட் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.